Arulvakku

16.03.2019 — Love without boundaries

*1st week in Lent, Saturday – 16th March 2019 — Gospel: Mt 5,43-48*
*Love without boundaries *
Jesus’ final exhortation sums up all that he has taught so far in his sermon on the mount. This teaching presents the principle of love, the foundation, on which all other virtues are built up. The command to “love your neighbour” (Lev 19,18) is found in the Torah, but nowhere in the First Testament is there a command to hate your enemy. It was generally understood, however, that such love was required towards those who shared in Israel’s covenant but not necessarily towards those outside the community. For Jesus, love even for enemies gets at the heart of God’s complete intention and fullest goal. His teachings always transcend typical human practice and invites his disciples to love without boundaries. In the examples Jesus offers, he demonstrates that love concerns not just emotions but actions. His teaching is an invitation to begin living in God’s reign, reaching always towards the fullness of the future kingdom that God has promised. The motivation for all these loving actions is not just to receive reciprocal treatment, but rather to imitate the way God loves. By seeking to practice and fulfil the law we enter into the nature of God’s perfection.
தமது மலைப்பிரசங்கத்தின் கடைசி அறிவுரைப் பகுதியில் இதுவரை கற்பித்த எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கின்றார் இயேசு. இப்போதனையில் எல்லா நல்லொழுக்கங்களையும் கட்டமைக்க அடித்தளமாக விளங்கும் அன்பின் தன்மையைச் சுட்டிக் காட்டுகின்றார். “அடுத்திருப்பவர் மேல் அன்பு கூர்வாயாக” என்ற கட்டளை சட்டநூலில் உள்ளது. ஆனால் ‘உன்னுடைய விரோதியை வெறுப்பாயாக’ என்ற கட்டளை முதல் ஏற்பாட்டு நூல்களில் காணவில்லை. இஸ்;ரயேலின் உடன்படிக்கையில் இணைந்துள்ளவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற அன்பு தேவைப்பட்டது. ஆனால், அச்சமூகத்தைச் சாராதவர்களுக்கு இது அவசியம் இல்லை என்று பொதுவாக புரிந்து கொள்ளப்பட்டது. விரோதிகளின் அன்பு இறைவனின் இதயத்தில் முழுமையான எண்ணமாகவும் உன்னதமான குறிக்கோளாகவும் உறைகின்றது என்பதை இயேசு வெளிப்படுத்துகின்றார். அவருடைய போதனைகள் எப்பொழுதும் சாதாரண மனித நடைமுறைகளைக் கடந்து, எல்லையில்லா அன்பு கொண்டு வாழ தம் சீடர்களை அழைக்கின்றது. அவர் மேற்கோள் காட்டிய உதாரணங்களில், அன்பின் ஈடுபாட்டை உணர்ச்சிகளால் அல்ல, மாறாக செயல்களினால் நிரூபிக்கின்றார். அவரின் போதனைகள் இறையாட்சியை இப்பொழுதே வாழ்ந்து, கடவுள் வாக்களித்துள்ள வருங்கால இறையரசின் முழுமையில் நுழைய அழைப்பு விடுக்கின்றது. இந்த அன்புச் செயல்களுக்கான உந்துதல் ஒருவர் மற்றவருக்கிடையே எற்படுத்தும் பண்டமாற்றமல்ல, மாறாக, இறைவன் நேசிப்பது போல அவரைப் பின்பற்றுவதாகும். சட்டங்களை கடைபிடித்து நிறைவேற்றுவதன் மூலம் நாம் இறைவனின் முழுமையான இயல்புக்குள் நுழைகிறோம்.