Arulvakku

17.03.2019 — Communication with God transforms life

*2nd Sunday of Lent – 17th March 2019 — Gospel: Lk 9,28b-36*
*Communion with God transforms life*
Luke continually emphasizes that prayer is the context for understanding who Jesus is and what it means to be his disciple. Here again he shows that Jesus takes his disciples upon the mountain to pray, and he is at prayer when his disciples witness his transfigured glory (9,29). Both He and they needed the calm of the mountain solitude and his prayer was answered by the transfiguration. If there had been no prayer, there would have been no transfiguration. Whatever the message the transfiguration had for his disciples, it had a message for Jesus too. Jesus needed the strength to bear His cross, and he received that strength through the solitude of his prayer. The reason why the three were there, because they were downhearted and saddened by the thought of His death. Therefore they were heartened and lifted up by a glimpse for a moment of the indwelling glory that was always there in Him after every prayer experience. The deepening faith in Jesus is a result of the contemplation of His prayerful life. Thus transfiguration becomes a source to know Him in depth. It becomes a sign to receive the spiritual assistance from God in every circumstances. It becomes a prophecy of what it will be for all who love Jesus and grow like Him here on earth. Any amount of asking and begging will have no effect, unless we enter into the realm of prayer and then better transformation will follow true prayer.
செபத்தின் பின்னணியில் இயேசுவை அறிந்து கொள்ளவும், சீடத்துவத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும் நற்செய்தியாளர் லூக்கா தொடர்ந்து வலியுறுத்துகின்றார். மறுபடியும் இயேசு தம் சீடர்களை செபம் செய்ய மலைக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே, அவர் செபிக்கும் வேளையில் அவரது உருமாற்ற மகிமைக்கு சீடர்கள் சான்று பகர்கின்றார்கள். மலையின் அமைதியும் தனிமையும் அவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் மிகவும் தேவை. இதனால் அவருடைய செபத்தின் பதில் உருமாற்றத்தில் கிடைக்கிறது. செபம் இல்லையென்றால், எந்த உருமாற்றமும் இல்லை எனலாம். சீடர்களுக்கு இயேசுவின் உருமாற்றம் பல செய்திகளைக் கொண்டிருந்தாலும், இயேசுவுக்கும் அதில் ஒரு செய்தி இருந்தது. இயேசு தம்முடைய சிலுவையைச் சுமக்க தேவைப்பட்ட வலிமையை தனிமையான செபத்தின் வல்லமையால் பெற்றுக் கொள்கின்றார். அவருடன் இருந்த மூன்று பேரும் இயேசுவின் இறப்பைக் குறித்து மனச்சோர்வடைந்து வருத்தப்பட்டார்கள். எனவே, ஒவ்வொரு முறையும் இயேசுவை அவருடைய செபத்திற்குப் பின் கண்டுணரும் மகிமையான வெளிப்படுத்துதலை இப்பொழுதும் கண்டதால் சீடர்களுடைய இதயம் மகிழ்ச்சியால் தூண்டப்படுகிறது. இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பது என்பது அவருடைய செபவாழ்வை ஆழமாக தியானப்பதின் விளைவாகும். இவ்வாறு உருமாற்ற அனுபவம் இயேசுவை ஆழமாக அறிந்து கொள்ள ஒரு ஆதாரமாக மாறும். இது எல்லா சூழ்நிலையிலும் இறைவனின் ஆன்மீக சக்தியைப் பெறுவதற்கான அடையாளமாக மாறும். மேலும் இது இயேசுவை நேசிப்பவர்களுக்கும் அவரைப் போன்று இவ்வுலகில் வாழ்வோருக்கும் ஒரு இறைவாக்காகவும் அமையும். உள்ளார்ந்த செபத்தில் இணைந்தாலன்றி, நம்முடைய வேண்டல்களும் கோரிக்கைகளும் எந்த பலனையும் பெற்றுத் தராது. மாறாக, உண்மையான செபம் உருமாற்றத்திற்கு வழிவகுக்கும்.