Arulvakku

23.03.2019 — Value relationships than rights

*2nd week in Lent, Saturday – 23rd March 2019 — Gospel: Lk 15,1-3.11-32*
*Value relationships than rights*
The parable of the prodigal son focuses on the father’s reaction to each of the two sons. The father expresses the unfathomable grace of God, and the two sons embody two different attitudes that prevent people from experiencing God’s abundance. The younger son claimed his rights due to him, but in the process he destroyed his relationship with his family, relatives, and friends. The older son who seems to be responsible and has always done everything his father asked of him, now becomes angry and refuses to enter the house. He is lost in his self-pity and bitter resentment, and he is unable to live the joyful life as a beloved son of his father. The sinners are mirrored in the attitude of the younger son and the religious leaders are mirrored in the mindset of the older son. We are all lost children who have been found by our Father. Yet we maintain ways of thinking about God that deprive us of joy in our Father’s presence. Either we remain identified with our past sins or execute duties with obedience, but in either case we consciously reject Father’s steadfast love and unlimited grace. Because we tend to demand our rights without valuing the true relationships.
ஊதாரி மைந்தன் உவமை இரண்டு மகன்களுக்கு தந்தை காட்டிடும் பதிலில் கவனம் செலுத்துகின்றது. கடவுள் தரும் அளவிட முடியா கொடையினை தந்தை வெளிப்படுத்துகின்றார். மேலும், கடவுளின் முழுமையை அனுபவிக்கத் தடுக்கும் இரண்டு விதமான மனப்பான்மையை இரண்டு மகன்களின் எண்ணங்கள் வெளிப்படுத்துகின்றன. இளைய மகன் தனது உரிமைகளை வாதாடிப் பெற்றதால் தனது குடும்பம், உறவினர், மற்றும் நண்பர்களின் உறவினை இழந்து விட்டார். முதல் மகன் பொறுப்புள்ளவனாக இருக்கின்றார்; தந்தை அவரிடம் கேட்பவற்றை எல்லாம் எப்பொழுதும் செய்துள்ளார். இப்பொழுது கோபமானதால் தன்னுடைய சொந்த வீட்டிற்குள் நுழைய மறுக்கின்றார். அவரின் கசப்பான கோபத்தினாலும் சுய அனுதாபத்தினாலும் தன்னையே இழக்கின்றார். இதனால், அவருடைய தந்தையின் அன்பு மகனாய் தனக்கான மகிழ்ச்சியான வாழ்வை வாழ இயலவில்லை. இளைய மகன் மனப்பான்மை பாவிகளையும், முதல் மகன் மனநிலை மதத்தலைவர்களையும் பிரதிபலிக்கின்றது. இழந்து போன நாம் அனைவரும் தந்தையால் கண்டுபிடிக்கப்பட்டவர்களே. இருப்பினும், தந்தையின் உடனிருப்பில் உள்ள மகிழ்ச்சியை தவிர்க்கவும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் பல வழிகளில் சிந்தித்து செயல்படுத்துகின்றோம். ஒருபுறம் நாம் கடந்தகால பாவங்களில் அடையாளப் படுத்திக் கொள்கிறோம் அல்லது கீழ்ப்படிதலோடு கடமைகளை நிறைவேற்றுகின்றோம். இவ்விரு நிலையிலும் தந்தையின் உறுதியான அன்பையும் எல்லையில்லா அருளையும் உணர்ந்தே ஒதுக்குகின்றோம். காரணம், நம் உறவுகளில் உள்ள உண்மையான அன்பை மதிப்பிடாமல் எப்பொழுதும் நம்முடைய உரிமைகளை மட்டுமே கோருகின்றோம்.