Arulvakku

04.04.2019 — In defence of Jesus’ witnesses

*4th week in Lent, Thursday – 4th April 2019 — Gospel: Jn 5,31-47*
*In defence of Jesus’ witnesses*
Jesus continues to defend himself before the religious authorities and speaks as if he were in a courtroom. He acknowledges that more than his own testimony is required for his defence. The interrogation of witnesses was central to Jewish legal procedure, and at least two or three witnesses were necessary for a proceeding (Deut 17,6; 19,15). So Jesus begins to place his witnesses. The first witness is John the Baptist, who has already testified to the truth about Jesus. Jesus says John was “a burning and shining lamp”, a reference to the psalm in which God said, “I have prepared a lamp for my anointed one” (Ps 132,17). John was that lamp, an important but temporary witness that cast its light on the coming messiah. The second witness is the testimony of Jesus’ works. The deeds that Jesus has been doing ought to testify to his divine origins. The third witness is the Father. For the Father’s voice cannot be actually be heard and the Father’s form cannot really be seen, except in and through Jesus. The final witness is Scriptures. For the Scriptures point to Jesus as the way to life. However, the religious authorities are unwilling to accept Jesus from the above witnesses, including their own Hebrew Scriptures.
மதத் தலைவர்களுக்கு முன்பாக தொடர்ந்து தன்னை தற்காத்துக் கொள்ள, இயேசு நீதிமன்றத்தில் உரையாடுவது போன்று இங்கு பேசுகின்றார். தன்னை பாதுகாத்துக் கொள்ள தனது சொந்த சாட்சியத்தை விட கூடுதலான சாட்சியம் தேவை என்பதை ஏற்றுக் கொள்கின்றார். யூத சட்ட நடைமுறைக்கு சாட்சிகளின் விசாரணைகள் மையமாக இருந்தன. ஒரு நடவடிக்கைக்கு குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் தேவை. எனவே இயேசு தம் சாட்சிகளை முன் வைக்கின்றார். முதலாவது சாட்சியான திருமுழுக்கு யோவான், இயேசுவைப் பற்றிய உண்மைக்கு ஏற்கனவே சாட்சியமளித்துள்ளார். இதன் பின்னணியில், இயேசு யோவானைப் பற்றி “எரிந்து சுடர்விடும் விளக்கு” என்று கூறியது கடவுளின் கூற்றான “நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஒரு ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்” என்ற சங்கீத குறிப்பை நினைவுபடுத்துகின்றது. யோவானே அந்த விளக்கு, வரவிருக்கும் மெசியா மீது ஒளியேற்றும் முக்கியமான மற்றும் தற்காலிக சாட்சியம் அவரே. இரண்டாவது சாட்சி இயேசுவின் செயல்கள். இயேசு செய்து வந்த செயல்களே அவருடைய தெய்வீக பின்புலத்திற்கு சாட்சியாக அமைந்துள்ளன. மூன்றாவது சாட்சி தந்தை. இயேசு வழியாய் அன்றி உண்மையில் தந்தையின் குரலை கேட்கவும், அவரின் வடிவத்தை காணவும் எவராலும் முடியாது. இறுதி சாட்சியான மறைநூல்கள் இயேசுவே வாழ்வுக்கான வழி என்பதை சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு, மேலே உள்ள அனைத்து சாட்சியங்களும் இயேசுவுக்கே சான்றுபகர்கின்ற என்றாலும், இதனை மதத்தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, குறிப்பாக அவர்களுடைய எபிரேய மறைநூலில் இருந்து வெளிப்படும் சான்று உட்பட.