Arulvakku

05.04.2019 — Jesus’ transcends the expectations

*4th week in Lent, Friday – 5th April 2019 — Gospel: Jn 7,1-2.10.25-30*
*Jesus’ transcends the expectations*
The feast of Booths comes at the end of the agricultural year and at the end of the pilgrimage festivals. This feast anticipates the end times and the coming of the messiah. As Israel’s prophets proclaimed, in those days all the people of the world will go up to Jerusalem to worship God on the feast of Booths (Zech 14,16). It is at this time of fulfillment that the people of Jerusalem, who were in expectation of the Messiah, speculate about Jesus’ identity based on his origin. Their confusion expresses the fact that the Jewish people had variety of messianic expectations. Jesus’ words and actions in the temple will transcend and transform the Jewish expectations of the Messiah expressed during this feast. Although the people believed that Messiah’s origin is hidden or unknown; yet, Jesus’ true origin is God himself, not of geographical place. In referring to God as “the one who sent me”, Jesus not only fulfilled their various expectations, but perfects the hopes of Israel in his own unique way.
விவசாய ஆண்டின் இறுதியில் மற்றும் திருயாத்திரை விழா நிறைவில் யூதர்களின் கூடாரத் திருவிழா நடைபெறும். இவ்விழா இறுதிகாலத்தையும் மற்றும் மெசியாவின் வருகையையும் எதிர்நோக்கியுள்ளது. இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் முன்னறிவித்தது போன்று, கூடாரத் திருவிழா நாட்களில் உலக மக்கள் அனைவரும் எருசலேமுக்குச் சென்று கடவுளை வழிபடுவார்கள். இவ்வாறு நிறைவு காலத்தில் மெசியாவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எருசலேம் மக்கள் இயேசுவின் தோற்றத்தையம் அடையாளத்தையும் பற்றிய ஆய்வை மேற்கொள்கின்றனர். அவர்களிடையே ஏற்பட்ட குழப்பம் மெசியா பற்றி பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளை யூத மக்கள் கொண்டிருந்தனர் என்பதை வெளிப்படுத்துகின்றது. இத்திருவிழா சமயத்தில் இயேசு ஆலயத்தில் வெளிப்படுத்திய வார்த்தைகளும் செயல்களும் மெசியாவின் யூத எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்திருக்கும். மெசியாவின் தோற்றம் மறைக்கப்பட்டது அல்லது அறியமுடியாதது என்ற நம்பிய மக்களுக்கு; இயேசுவின் உண்மையான தோற்றம் புவி சார்ந்ததல்ல, கடவுளிடமிருந்தே என்று வெளிப்படுத்துகின்றார். “என்னை அனுப்பியவர் அவரே” என்று கடவுளை குறிப்பிடுகையில், இயேசு அவர்களுடைய பல்வேறு எதிர்பார்ப்புகளை மட்டும் நிறைவேற்றாமல், இஸ்ரயேலின் நம்பிக்கைகளை தன்னுடைய தனித்துவத்தில் பூர்த்தி செய்கின்றார்.