Arulvakku

07.04.2019 — God writes straight in crooked lives

*5th Sunday of Lent – 7th April 2019 — Gospel: Jn 8,1-11*
*God writes straight in crooked lives*
The gospel writer unfolds this story in two parallel scenes, each beginning when Jesus bends down and writes on the ground (8,6.8). This gesture can be understood as a sign of the tranquil confidence of Jesus, who refused to enter the zealous fervour of the woman’s accusers. Each time he rises from the ground, he pronounces a pivotal verse that changes the course of the action. When he speaks the first time to the scribes and the Pharisees (8,7), he pinpoints that before God and in our conscience, we are all sinners. The upshot is that the accusers become the accused and gradually walk away. When Jesus rises again from the ground, he is left alone with the woman and now he speaks to her directly. She is no longer an object exhibited in a trail, but she is a person who can enter into a relationship with Jesus. The forgiveness of Jesus gives her the opportunity to live a new life. Not only has Jesus saved her physical life from those who would stone her, but also he offers her the possibility of a genuine life in a right relationship with God (8,11).
நற்செய்தியாளர் இக்கதையை இரண்டு காட்சிகளாக இணைத்து வெளிப்படுத்துகிறார். அதில் ஒவ்வொரு தொடக்கத்திலும் இயேசு கீழே குனிந்து தரையில் எழுதுகின்றார் என்று வர்ணித்துள்ளார். இச்செயல் குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணை தீர்ப்பிட ஆர்வத்தோடு சூழ்ந்திருப்போரிடமிருந்து இயேசு விலகி இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. மேலும், அவர் தன்னுள் கொண்டிருந்த சலனமற்ற நம்பிக்கையின் அறிகுறியாகவும் புரிந்து கொள்ளலாம். ஓவ்வொரு முறையும் தரையில் இருந்து அவர் எழும் போது, அவர் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வசனம் நடைபெற இருந்த செயலின் போக்கையே மாற்றியமைத்தது. முதல்முறையாக மறைநூல் அறிஞர்களிடமும் பரிசேயர்களிடமும் அவர் பேசும்போது, நாம் அனைவரும் கடவுள் முன்பாகவும் நமது மனச்சாட்சிப்படியும் பாவிகள் என்பதை சுட்டிக்காட்டுகின்றார். இதன் விளைவாக குற்றம் சாட்டியவர்கள் குற்றவாளியாக மாறியதால், அவர்கள் அவ்விடத்தைவிட்டு படிப்படியாக வெளியேறினர். இயேசு தரையில் இருந்து மீண்டும் எழுந்த போது, அவர் பெண்மணியுடன் தனித்து இருக்கிறார். இப்பொழுது அவர் நேரடியாக அவளிடம் பேசுகின்றார். இனிமேல் அவள் ஒரு குற்றம் சாட்டப்பட்ட பொருள் அல்ல; மாறாக, அவள் மனுசியாக மதிக்கப்பட்டதால், இயேசுவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார். இயேசுவின் மன்னிப்பு அவளுக்கு புதிய வாழ்வை வாழ வாய்ப்பளிக்கிறது. அப்பெண்ணின் உடலை இயேசு கல்லடிபடாமல் காப்பாற்றியதோடு, மேலும் கடவுளோடு சரியான உறவைக் கொண்ட உண்மையான வாழ்க்கையை அவளுக்கு அளிக்கிறார்.