Arulvakku

09.03.2019 — Jesus reveals himself as “I AM”

*5th week in Lent, Tuesday – 9th April 2019 — Gospel: Jn 8,21-30*
*Jesus reveals himself as “I AM”*
During the exodus, the Israelites would have died in the wilderness if they had not been led by the God revealed to them as “I AM”. Here Jesus proclaims that he is that saving divine presence for God’s people: “You will die in your sins unless you believe that I am he.” When Moses lifted up the bronze serpent, the people who gazed at it saw two things. First, they got a graphic look at their own sins. Grumbling, blaming, and complaining are as deadly as serpents. They deviate the people and turndown God’s ability to take care of them. Second, the people got a look at God’s mercy; whoever looked at the bronze serpent was instantaneously healed. In the same way, when we gaze at Jesus lifted upon the cross, we see both ourselves and Jesus more clearly. In being lifted upon the cross, Jesus reveals the fullness of his saving presence. He defines himself as the one in whom the God of exodus is present to save his people not only from sins but from death itself.
விடுதலைப் பயண அனுபவத்தில் “இருக்கின்றவர் நானே” என்று இறைவன் தம்மையே வெளிப்படுத்தி இஸ்ரயேல் மக்களை வழிநடத்தாமல் இருந்திருந்தால் அவர்கள் பாலைவனத்திலேயே இறந்து போயிருப்பார்கள். அவ்வாறே இயேசு கடவுளின் தெய்வீக பிரசன்னத்திலிருந்து நம்பிக்கைக்குரிய மக்களை காப்பாற்றுவதாக இங்கு பறைசாற்றுகின்றார்: “‘இருக்கின்றவர் நானே’ என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்.” மோசே வெண்கலப் பாம்பை உயர்த்திய போது, அதனை பார்த்த மக்கள் இரண்டு விடயங்களைக் கண்டார்கள். முதலில், அவர்கள் தங்கள் சொந்த பாவங்களை ஒரு வரைபடைமாக பார்த்தார்கள். முணுமுணுத்தல், பழி சொல்லுதல், மற்றும் குறை சொல்லுதல் இவையெல்லாமே கொடிய பாம்புகளாகும். இவை கடவுளிடமிருந்து மக்களை விலக்குவதோடு, அவர் மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாதவர் என்னும் தவறான பண்பை உருவாக்குகின்றது. இரண்டாவது, கடவுளின் இரக்க குணத்தை மக்கள் கண்டு உணர்ந்தார்கள். அதாவது யாரெல்லாம் அந்த வெண்கலப் பாம்பை பார்த்தார்களோ அவர்கள் அனைவரும் உடனடியாக குணமடைந்தார்கள். இதே நிலையில், சிலுவையில் உயர்த்திய இயேசுவை நாம் உற்று நோக்கும் பொழுது, நம்மையும் இயேசுவையும் இன்னும் தெளிவாகக் கண்டுணர்வோம். இயேசு சிலுவையில் உயர்த்தப்படுகையில், நமது மீட்பின் பிரசன்னத்தை முழுமையாக வெளிப்படுத்துகின்றார். தம்முடைய மக்களை பாவங்களிலிருந்து மட்டுமல்ல, மரணத்திலிருந்தும் காப்பாற்றும் விடுதலை கடவுளாக இயேசு தம்மை வரையறுத்துள்ளார்.