*5th week in Lent, Friday – 12th April 2019 — Gospel: Jn 10,31-42*
*Rejection of God’s living temple*
Jesus is walking and teaching in the temple during yet another Jewish Feast of Dedication. The Feast of Dedication remembers the sanctification of the temple’s altar of sacrifice after its desecration. But Jesus is present at the feast as “the one whom the Father has sanctified and sent into the world.” Therefore, Jesus brings to completion the sign and the foreshadowing of Israel’s Feast of Dedication. The stone altar and the magnificent building will be destroyed, but the One sanctified by the Father is the living temple of God’s presence in the world. Israel’s search for the unseen God finds its goal in the face of Jesus. Despite all that Jesus has taught and all that he has done, the Jewish leaders who gathered around him in the temple still do not know who he is, and they attempt to stone Jesus again.
யூதர்களின் திருவிழாவான கோவில் அர்ப்பண விழாவில் இயேசு ஆலயத்தில் நடந்து கொண்டும் போதித்துக் கொண்டும் இருந்தார். இந்த அர்ப்பணத் திருவிழா ஆலயம் இடிக்கப்பட்ட பின் பலிபீடம் கட்டியெழுப்பப்பட்டு, அர்ச்சிக்கப்பட்டத்தை நினைவுபடுத்துகின்றது. ஆனால், இத்திருவிழாவில் இயேசுவே தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்டவர் என்று வெளிப்படுத்துகின்றார். எனவே, இஸ்ரயேலின் அர்ப்பணத் திருவிழாவின் முன் அடையாளமும் அதன் நிறைவும் இயேசுவே என்று அறிவிக்கின்றார். கல்லால் ஆன பீடமும் அற்புத கலைநயம் கொண்ட கட்டடமும் அழிக்கப்படும், ஆனால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு வாழும் கடவுளின் ஆலயமாய் இவ்வுலகில் இருப்பவர் இயேசு ஒருவரே. காணாத கடவுளை தேடி அலையும் இஸ்ரயேல் மக்களின் இலக்கினை இயேசுவின் முகத்தில் காணலாம். ஆலயத்தில் இயேசு போதித்த எல்லாவற்றையும், அவர் செய்த செயல்கள் அனைத்தையும் தாண்டி யூதத்தலைவர்கள் இன்னும் அவரை அறிந்து கொள்ளவில்லை; மாறாக கல்லால் எரிந்து கொல்ல முனைப்புடன் செயல்பட்டனர்.