Arulvakku

18.04.2019 — He loved to the end

*Maundy Thursday – 18th April 2019 — Gospel: Jn 13,1-15*
*He loved to the end *
The climactic actions of the gospel begin to unfold as “Jesus knew his hour”. This was the hour “to depart from this world and go to the Father.” This “hour” of Jesus includes his last meal, arrest, execution, burial, resurrection and return to the Father. At this hour, Jesus summarizes his entire life and death in love: “Having loved his own who were in the world, he loved them to the end”. “To the end” means both to the end of his life on earth and loving them completely. At his last meal with his disciples, Jesus performed an action which demonstrates that love is only real when it is expressed in loving service. The powerful symbolic action of foot washing is a wonderful summary of Jesus’ whole life. On the night before his death, he shows them what his life has been about and what his death will mean. In place of the institution of the Eucharist during Supper, though not significant in John’s gospel, the evangelist recounts Jesus washing his disciples’ feet. Both these actions express the self-giving of Jesus and his love to the end. This core theme of love is manifested as a foundational premise at the episode’s beginning, actualized in action at the middle and culminates with proper teaching.
“தம் நேரம் வந்துவிட்டது” என்று அறிந்திருந்த இயேசுவினுடைய உச்சக்கட்ட செயல்களை நற்செய்தி வெளிப்படுத்தத் தொடங்குகின்றது. இது “இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான” நேரமாகும். இயேசுவின் இந்நேரத்தில் அவருடைய இறுதியுணவு, கைது செய்தல், மரண தண்டனை, அடக்கம், உயிர்ப்பு மற்றும் தந்தையிடம் திரும்புதல் ஆகியவை அடங்கும். இம் மணித்துளியில், இயேசு தம் வாழ்நாள் முழுவதையும் மரணத்தையும் அன்பினால் சுருக்கிக் கூறுகின்றார்: “உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர், அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.” ‘இறுதிவரை’ என்பது அவர் இப்புவியில் வாழ்ந்த வரையிலும், மற்றும் அவர்களை முழுமையாக நேசிப்பதையும் அர்த்தப்படுத்துகின்றது. இயேசு தம் சீடர்களோடு இறுதி உணவை உண்டபோது அன்பே உண்மையானது என்பதை நிரூபிக்கும் ஒரு உன்னத அன்புச் செயலை வெளிப்படுத்தினார். பாதம் கழுவுதல் என்பது சக்தி வாய்ந்த அடையாளச் செயலாகும். அதில் இயேசு தன்னுடைய வாழ்நாளின் சாராம்சத்தை வெளிப்படுத்தினார். அவரது மரணத்திற்கு முந்திய இரவில், தன்னுடைய வாழ்வு எத்தகையது என்பதையும் தம் மரணத்தின் அர்த்தத்தையும் அவருடைய சீடர்களுக்கு காட்டுகின்றார். இறுதி உணவில் இயேசு ஏற்படுத்திய நற்கருணைக்கு யோவான் நற்செய்தியாளர் முக்கியத்துவம் கொடுக்கவில்லையெனினும், சீடர்களின் பாதம் கழுவியதை அவர் ஆழமாக பதித்துள்ளார். இவ்விரு செயல்களும் இயேசு தன்னையே அர்ப்பணித்ததையும் இறுதிவரை அவர் காட்டிய அன்பையும் வெளிப்படுத்துகின்றன. கருப்பொருளான இவ்வன்பு இப்பகுதியின் அடிப்படை ஆதாராமாக தொடக்கத்திலும், செயல் வடிவமாக மையப்பகுதியிலும், சரியான போதனையுடன் நிறைவுபெறுகின்றது.