Arulvakku

23.04.2019 — Resurrection is life-transforming experience

*Tuesday within Easter Octave – 23rd April 2019 — Gospel: Jn 20,11-18*
*Resurrection is life-transforming experience*
Resurrection experience proves Mary Magdalene’s passionate love for Jesus. As a woman, she is overwhelmed by her loss and expresses tears of grief (20,11.13.15). While she is weeping and looking for risen Jesus, she sees him but does not realize it is He. When Jesus calls her by name as “Mary”, she does recognize him and establishes a personal bond with him. In that mutual recognition she is trying to hold on to Jesus. After that, she becomes the first chosen to announce the good news of Jesus’ resurrection. When she proclaims, “I have seen the Lord”, she is referring to an experience far deeper and more real than simply a visual sight. It is a life-transforming experience, a deeply personal and mystical encounter. It is an experience of intimate and loving recognition, where Mary has moved from the darkness to the light of faith. She has seen Jesus as Lord, and she cannot help but become the messenger of that good news to others. Paul used her credential, “I have seen the Lord”. He used it to insist on his own authority as an apostle: “Am I not an apostle? Have I not seen Jesus our Lord?” (1 Cor 9,1). With Mary’s announcement, seeing has become an identity for the apostles and the model for transforming experience.
உயிர்ப்பு அனுபவம் மகதலா மரியாள் இயேசுவை உணர்ச்சிகரமாக அன்பு செய்தாள் என்று நிரூபிக்கின்றது. ஒரு பெண்ணாக தன்னுடைய இழப்பில் அதிகம் மூழ்கிப் போகிறாள் என்பதையும் மற்றும் துக்கத்தை கண்ணீரால் வெளிப்படுத்துகிறாள் என்றும் அறிகிறோம். உயிர்த்த இயேசுவைத் தேடி அழுகிறாள், அவரைக் கண்டும் அவள் அதை உணரவில்லை. இயேசு ‘மரியாள்’ என்று பெயர் சொல்லி அழைத்ததும் உடனே அடையாளம் கண்டுகொண்டு அவருடன் தனிப்பட்ட உறவை நிலைநிறுத்துகின்றார். அந்த பரஸ்பர அங்கீகாரத்தில் அவள் இயேசுவைப் பற்றிக் கொள்ள முயலுகின்றாள். இதனால் இயேசுவின் உயிர்த்தெழுதலின் நற்செய்தியை அறிவிக்க முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவளின் நற்செய்தி “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்பதே. இவ்வனுபவம் மேலோட்டமானதல்ல, மாறாக மிகவும் உண்மையான மற்றும் உன்னதமான காட்சி அனுபவமாகும். இது ஒரு வாழ்க்கை மாற்று அனுபவம், ஒரு ஆழமான தனிப்பட்ட மற்றும் ஆன்மீக அனுபவமாகும். இது ஒரு நெருங்கிய மற்றும் அன்பான அங்கீகார அனுபவமாகும், ஏனெனில் இதில் மரியாள் இருளிலிருந்து நம்பிக்கையின் ஒளிக்கு நகர்ந்தாள். அவள் இயேசுவை ஆண்டவராக கண்டதால், நற்செய்தியின் தூதுவராக மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருக்கமுடியாது. பவுல் அடிகளாரும் “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்ற அவளது நம்பிக்கை கோட்பாட்டை பயன்படுத்துகின்றார். தன்னுடைய அப்போஸ்தலிக்க அதிகாரத்தை வலியுறுத்த அவர் அதைப் பயன்படுத்தினார்: “நானும் ஒரு திருத்தூதன் அல்லவா? நம் ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா?” மரியாளின் நற்செய்தியில் ‘காண்பது’ என்பது திருத்தூதர்களின் அடையாளமாகவும் மாற்று அனுபவத்தின் மாதிரியாகவும் அமைந்துள்ளது.