Arulvakku

25.04.2019 — Revelations leading to worship

*Thursday within Easter Octave – 25th April 2019 — Gospel: Lk 24,36-48*
*Revelations leading to worship *
The resurrection account confirms, first and foremost, the real and bodily presence of Jesus. At first the disciples suppose that they are seeing some kind of insubstantial, ghostly presence. But Jesus emphasizes his “flesh and bones”, suggesting that he shares a common humanity with them. Next He invites them to take a look at his hands and feet, to touch him in order to know that his body is real. The narrative counters arguments that the disciples perhaps saw nothing more than a fleeting vision or a grief-induced hallucination. As a final proof, He even eats a piece of broiled fish in their presence, since ghosts and visions do not eat. Surely the resurrection account confirms that this is the same Jesus who lived among them before his death. The risen Lord is the man of Galilee, indeed real and recognizable. This testimony not only removes the various incredulous, terrified, and startled emotions from the disciples, but fills them with great joy and turns out to worship Jesus.
முதன்முதலாக, உயிர்த்தெழுதல் வர்ணனை இயேசுவின் உண்மையான உடலிருப்பை உறுதிப்படுத்துகின்றது. தொடக்கத்தில் சீடர்கள் உடலற்ற ஆவியைப் போன்ற உருவத்தைப் பார்ப்பதாகக் கருதினார்கள். ஆனால் இயேசு தமது “சதையையும் எலும்புகளையும்” வெளிப்படுத்தி தன்னை ஒரு சாதாரண மனிதராக காட்டிக் கொள்கின்றார். அடுத்ததாக, அவர் தம் கைகளையும் கால்களையும் தொட்டுப் பார்க்க அனுமதிக்கின்றார். இவ்வாறு அவரது உடல் உண்மை என்பதை தெரிந்து கொள்ள அழைக்கின்றார். இதற்கு எதிர்மாறாக சீடர்களின் வர்ணனையோ கண்சிமிட்டும் பார்வையாகவும் அல்லது துயரத்தால் தூண்டப்பட்ட மாயத்தோற்றமாகவும் அமைந்துள்ளது. இறுதி ஆதாரமாக, பேய்களும் காட்சி உருவகங்களும் சாப்பிடாத நிலையில், இயேசு அவர்கள் முன்னிலையில் பொரித்த மீனை உண்கின்றார். மேற்கூறிய உயிர்த்தெழுதலின் அனுபவப் பதிவுகள் இயேசுவை மரணத்திற்கு முன்பு வாழ்ந்த அதே நபர்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றது. உயிர்த்தெழுந்த ஆண்டவர் உண்மையாகவே அடையாளம் காணக்கூடிய கலிலேய இனத்தவர். இச்சாட்சியம் சீடர்களின் நம்பிக்கையற்ற, திகிலூட்டும், திடுக்கிடும் உணர்ச்சிகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல்; அவர்களை நிறைவான மகிழ்ச்சியுடன் நிரப்பி இயேசுவை ஆராதிக்க வழிவகை செய்கிறது.