Arulvakku

27.04.2019 — Good news to whole creation

*Saturday within Easter Octave – 27th April 2019 — Gospel: Mk 16,9-15*
*Good news to whole creation *
Mark presents the resurrection appearance of Jesus three times; but each concluding with their refusal of unbelief. The first appearance to Mary Magdalene is consistent with the other gospels, but when she communicates the news to others that Jesus is alive, they do not believe her. The next event summarizes the appearance of Jesus to two disciples, similar to Emmaus experience of Luke’s gospel, which again is not believed by others. When Jesus appears to the eleven at table, the account resembles Johannine and Lukan version, he rebukes them for their refusal to believe in his witnesses. Despite Jesus repeatedly saying many times during his ministry that the Son of man would die and rise on the third day, his disciples did not understand what he meant. Neither could they be able to grasp the meaning of resurrection appearances through other persons. The simple reason is that they had the tendency to ignore all that is beyond their cognitive spectrum. Therefore, Jesus commissions his disciples to “proclaim the good news to whole creation.” The gospel gets shifted from people of Israel to all believers, Jews and Gentiles alike; from chosen ones to the whole world.
மூன்று முறை இயேசுவின் உயிர்த்தெழுதல் காட்சியை மாற்கு வர்ணித்துள்ளார். ஆனால் ஒவ்வொன்றும் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் காட்சி மகதலா மரியாளுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மற்ற நற்செய்தியோடு ஒத்திருக்கிறது. ஆனால், இயேசு உயிரோடு இருப்பதை அவள் மற்றவர்களுக்கு அறிவிக்கும் போது அவர்கள் அவளை நம்பவில்லை. அடுத்த நிகழ்வு, இரு சீடர்களுக்கு இயேசு வெளிப்படுத்தியதன் சுருக்கமாகும். இது லூக்கா நற்செய்தியின் எம்மாவு நிகழ்வை ஒத்தது. இதையும் மற்றவர்கள் நம்பவில்லை. அடுத்ததாக பந்தியில் இருந்த பதினொருவருக்குக் காட்சியளித்தார் இயேசு. இது யோவான் மற்றும் லூக்கா நற்செய்திகளின் வர்ணனையை ஒத்திருக்கின்றது. இதில் இயேசுவின் சாட்சியத்தை நம்ப மறுத்ததற்காக இயேசு அவர்களைக் கடிந்து கொள்கின்றார். மானிட மகன் இறந்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என இயேசு தம்முடைய பணிவாழ்வில் பலமுறை பேசிய போதும் அவருடைய சீடர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. மேலும் மற்ற நபர்கள் மூலம் அறிவிக்கப்படும் உயிர்த்தெழுதலின் அர்த்தத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் அவர்களின் அறிவாற்றலுக்கு அப்பால் உள்ள அனைத்தையும் புறக்கணிக்கும் மனநிலை அவர்களிடம் மிகுதியாய் இருந்ததால். எனவே, இயேசு தன்னுடைய சீடர்களிடம் “உலகெங்கும் சென்று படைப்பிற்கு எல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்று கட்டளையிடுகின்றார். இந்நற்செய்தி இஸ்ரயேல் மக்களிலிருந்து நம்பிக்கையுள்ள மக்கள் அனைவருக்கும் என்ற மாற்றத்தை முன்வைக்கின்றது. அதாவது யூதர்களையும் பிற இனத்தவர்களையும் இணைத்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலிருந்து உலகில் உள்ள எல்லாருக்கும் என்ற அழுத்ததைக் கொடுக்கின்றது.