Arulvakku

30.04.2019 — The Spirit acts like the gusty wind

*2nd week in Easter Time, Tuesday – 30th April 2019 — Gospel: Jn 3,7-15*
*The Spirit acts like the gusty wind*
In Jesus’ time the weather was a bit of mystery. No one could pin down the wind; no one could find its starting point or know when it would shift direction. It was always doing something unexpected. And so Jesus used this natural phenomenon to illustrate how surprising life is when you try to follow the Spirit. At the outset, the Spirit’s work doesn’t always seem to follow human logic. The Spirit is as mysterious as the wind and it is far beyond human understanding or control. However, Nicodemus came to Jesus looking for clarity, for a better understanding of what Jesus was teaching. But Jesus didn’t just take him one step farther in his faith; instead he challenged his assumptions and turned his whole world upside down. Jesus showed Nicodemus that he needed to embrace a whole new way of living, a way guided at times by the gusty wind of the Spirit.
இயேசுவின் காலத்தில் வானிலை பற்றிய அறிவு தெளிவற்றதாய் இருந்தது. காற்று எங்கிருந்து தொடங்குகிறது அல்லது எத்திசையில் மாறும் என்று யாரும் அறிந்திருக்கவில்லை. அது எப்போதும் எதிர்பாராத செயலை நிகழ்த்தும். எனவே, இந்த இயற்கை நிகழ்வை இயேசு பயன்படுத்தி ஆவிக்குரிய வாழ்க்கையை பின்பற்றும் போது வாழ்க்கையில் எப்படி ஆச்சரியமான திருப்பங்கள் நிகழும் என்பதை விளக்குகின்றார். வெளித்தோற்றத்தில், ஆவியானவரின் செயல்பாடுகள் எப்போதும் மனித வழிமுறைகளை பின்பற்றாது. ஆவியானவர் காற்றைப் போன்று மறைபொருளானவர்; மனித புரிதல்கள் அல்லது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவர். இருப்பினும், சரியான புரிதலுக்கும் மற்றும் போதனைகளின் தெளிவிற்கும் இயேசுவைத் தேடி வந்தார் நிக்கோதேம். ஆனால், இயேசு அவரை நம்பிக்கையில் மட்டும் ஒரு படி முன்னே அழைத்துச் செல்லவில்லை. மாறாக, அவருடைய எண்ணங்களை சவாலுக்கு உட்படுத்தி அவர் வாழ்ந்த உலகத்தையே தலைகீழாக புரட்டிப் போடுகிறார். சில சமயங்களில் பலமான காற்று போல ஆவியானவரின் வழிகாட்டலால் வாழ்க்கையில் முற்றிலும் புதிய வழியைத் தழுவிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இயேசு நிக்கோதேமுக்கு சுட்டிக் காட்டுகின்றார்.