Arulvakku

04.05.2019 — Disciples strengthened in Leadership

*2nd week in Easter Time, Saturday – 4th May 2019 — Gospel: Jn 6,16-21*
*Disciples strengthened in leadership *
On seeing Jesus walking on the sea – whom the disciples did not recognize – they were all panic-stricken. Only after Jesus’ reassurance did they calm down. This transformation of the apostles into bold and nurturing leaders was the fruit of the Spirit, bestowed upon them after the Lord’s resurrection. Strengthened by the Spirit and with the presence of Jesus, the disciples turned out to be effective leaders and builders of the nascent church. It is the Spirit-guided rootedness in faith that enables them to overthrow any challenge, obstacle and fear. Jesus in calming the storm assures his disciples that at their difficult times, Jesus comes to them in a miraculous way, joining them and being with them in and through the rough times. Later as leaders in their evangelization ministry, the disciples not only recalled this event, but were attuned to this presence of Jesus always. For the disciples of Jesus, leadership is also a common vocation to which each one must respond enthusiastically.
இயேசு கடல்மேல் நடப்பதைக் கண்டு, அவரை அறிந்து கொள்ளாத திருத்தூதர்கள் அனைவரும் மிகவும் கலக்கமுற்றார்கள். இயேசு தன்னுடைய உறுதியை வெளிப்படுத்திய பின் அவர்கள் மனஅமைதி அடைந்தார்கள். ஆண்டவரின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு தூய ஆவியின் வல்லமையினால் திருத்தூதர்கள் துணிச்சலுடைய தலைவர்களாக உருமாற்றம் பெற்றார்கள். ஆவியாலும் இயேசுவின் உடனிருப்பாலும் வலுப்படுத்தப்பட்ட அவர்கள் திறமையான தலைவர்களாக செயல்பட்டு தொடக்ககால திருச்சபையை கட்டியெழுப்பினார்கள். நம்பிக்கையின் ஆணிவேரான ஆவியின் வழிநடத்துதலால் அவர்கள் எல்லா சவால்களையும், தடைகளையும் பயத்தையும் தூக்கியெரிந்தார்கள். கடலின் சீற்றத்தை அடக்கிய இயேசு தம் திருத்தூதர்களுக்கு ஒர் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறார்; அதாவது அவர்களின் கடினமான நேரங்களில், அற்புதமான விதத்திலே அவர்களின் துன்பங்களுக்கு மத்தியில் உடனிருக்கிறார் என்பதே அது. பிற்காலத்தில் தங்களின் மறைத்தூதுப் பணிகளில் திருத்தூதர்கள் இந்நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தது மட்டுமல்லாமல் இயேசுவின் உடனிருப்பை முன்னிலைப்படுத்தியே எப்பொழுதும் வாழ்ந்தார்கள். இயேசுவின் திருத்தூதர்களுக்கு தலைமைத்துவம் என்பது பொதுவான அழைப்பாக இருப்பதால் ஒவ்வொருவரும் உற்சாகமாக பதிலளிக்க வேண்டும்.