Arulvakku

06.05.2019 — Eternal Priorities

*3rd week in Easter Time, Monday – 6th May 2019 — Gospel: Jn 6,22-29*
*Eternal Priorities *
Jesus teaches a lesson on priorities. When we invest our time, money and energy we usually focus on the length of benefit we get from it. In the same way, Jesus teaches to work for the food that endures for long, than those that perishes. In their desperate search, the crowds unexpectedly found Jesus on the other side of the lake. Jesus perceives that they have come to him only for the sake of food. The crowds have been fed, but they have not yet began to understand the significance of Jesus’ feeding or what truly Jesus has to give. And so Jesus began to teach them on the need of an eternal food that endures forever. For this he encourages them to believe in Him as God sent Messiah. Jesus has come to be their Saviour and giver of eternal life, but the crowd’s betray in their questioning that they are not very much interested in these truths. They are more interested in what Jesus can provide for them now rather than what he can do for them for eternity. Jesus prioritized eternal things, while the crowds neglected the eternal truths by attending to immediate things as more important.
முன்னுரிமைகளுக்கான பாடத்தினை இயேசு கற்பிக்கின்றார். நம்முடைய நேரத்தையும், பணத்தையும், ஆற்றலையும் நாம் முதலீடு செய்யும் போது, நாம் எத்தகைய நன்மையினை பெறுவோம் என்பதில் கவனம் செலுத்துகின்றோம். அதே விதத்தில், இயேசு அழிந்து போகும் உணவிற்காக அல்ல மாறாக, நிலையான உணவிற்காக உழைக்க கற்பிக்கின்றார். இயேசுவிற்கான மக்களின் தொடர் தேடலில் ஏரியின் மறுகரையில் அவரைக் கண்டார்கள். உணவிற்காக மட்டுமே அவர்கள் அவரைத் தேடி வந்திருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். இம்மக்களுக்கு நிறைவான உணவை வழங்கியிருந்தாலும், எதற்காக இயேசு உணவளித்தார் என்ற முக்கியத்துவத்தையும் அல்லது உண்மையில் இயேசு என்ன கொடுக்க விரும்புகின்றார் என்பதையும் அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எனவே, நிலையான உணவின் நித்திய தேவையை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக கற்பிக்கத் தொடங்கினார். இதற்காக அவரே கடவுள் அனுப்பிய மெசியா என்று அவரில் நம்பிக்கை கொள்ள ஊக்கப்படுத்துகின்றார். இவரே அவர்களின் மீட்பராகவும் நிலைவாழ்வு கொடுப்பவராகவும் வந்திருந்தாலும், இம்மக்கள் இந்த உண்மைகளில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்களின் எதிர் கேள்விகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. அவர்களுக்கு நித்திய வாழ்வில் இயேசு என்ன செய்வார் என்று அறிந்து கொள்வதைவிட, இப்பொழுது இயேசு அவர்களுக்கு என்ன கொடுக்க முடியும் என்பதிலே அதிக ஆர்வம் காட்டினார்கள். இயேசு நித்திய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார், அதே வேளையில் இப்போதைய தேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நிலையான உண்மைகளை மக்கள் புறக்கணித்தனர்.