Arulvakku

07.05.2019 — The bread that redeems eternally

*3rd week in Easter Time, Tuesday – 7th May 2019 — Gospel: Jn 6,30-35*
*The bread that redeems eternally*
Jesus proclaims the first of his seven “I AM” pronouncements. Through these proclamations Jesus assures eternal life to us. The miracle of the manna brought by Moses is completed and perfected by Jesus, when he says “I am the bread of life”. In Judaism, Moses was considered the first redeemer; the future Messiah, Jesus would be the second. The people expected that the manna would come down from heaven once again. To that crowd that asks for the bread of life, Jesus affirms in unmistakable terms that He is the bread of life that fully and permanently satisfies those who go to Him and believe in Him. He is the eternal life promised to the human race and is now offered to everyone for nourishment. The life of God, given us in Christ, is revealed through a real presence of the bread. He is God’s true sign, in all that he says and does. He is the food that never gets spoiled, the bread that satisfies our deepest hunger.
இயேசு தனது ஏழு “நானே” அறிவிப்புகளில் முதலாவதை இங்கு அறிவிக்கிறார். இவ்வதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் மூலம் நமக்கு நித்திய வாழ்வை உறுதியளிக்கின்றார். மோசே அற்புதமாய் கொணர்ந்த மன்னாவை, “வாழ்வு தரும் உணவு நானே” என்று அதனை நிறைவாக்கி முழுமையாக்குபவர் இயேசு. மோசே தான் முதல் மீட்பரென யூதமதத்தில் கருதப்பட்டார். எதிர்பார்த்திருந்த மெசியாவான இயேசு இரண்டாவது மீட்பராவார். விண்ணகத்திலிருந்து மன்னா மீண்டும் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அவ்வாறு வாழ்வு தரும் உணவை கேட்கும் மக்களுக்கு இயேசு உறுதியான வார்த்தைகளில் தாமே முழுமையான, நிரந்தரமான வாழ்வு தரும் உணவு என்றும், அவரிடம் சென்று நம்பிக்கை கொள்வோர் நிறைவாக்கப்படுவர் என்றும் தெளிவுபடுத்துகின்றார். இவரே மனித இனத்திற்கு வாக்களிக்கப்பட்ட நிலை வாழ்வு; இப்போது ஊட்டச்சத்தாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவின் மூலம் நமக்கு வழங்கப்பட்ட கடவுளுடைய வாழ்வு, உணவின் உண்மை இருப்பை வெளிப்படுத்துகிறது. அவரின் செயலிலும் சொல்லிலும் கடவுளின் உண்மை அடையாளமாக இருக்கிறார். அவர் கெட்டுப் போகும் உணவல்ல, மாறாக நமது பசியை நிறைவாக்கும் உணவாகும்.