Arulvakku

08.05.2019 — Never Failing Fulfillment

*3rd week in Easter Time, Wednesday – 8th May 2019 — Gospel: Jn 6,35-40 *
*Never failing fulfillment *
Our daily prayer ‘give us our daily bread’ is fulfilled in that fascinating experience of Jesus becoming the bread of life. With his never failing words and with his ever nourishing mystical body he strengthens us. His nourishment is unconditional, never toxic in anyway but ever loving and caring. The experience of this truth brings us closer to him and never takes us away from him. As the life giving bread, Jesus takes us to the higher degree of life, where we will never be hungry and thirsty for the ordinary pleasures of life. Under the Johannine metaphors of bread, water and life, Jesus symbolically refers to the same reality: a reality, which makes human beings see hunger, thirst and death as insignificant. This is nothing but the divine revelation given to human persons by and in Jesus.
“அன்றாட உணவை எங்களுக்குத் தந்தருளும்” என்ற நம்முடைய அனுதின செபத்தினை இயேசு வாழ்வு தரும் உணவாக மாற்றி நிறைவு செய்கின்றார் என்பது உன்னதமான அனுபவமாகும். அவருடைய வழுதவறா வார்த்தைகளும் ஊக்கமளிக்கும் மறையுடலும் நமக்கு வலிமையை தருகின்றது. அவருடைய ஊட்டச்சத்து நிபந்தனையற்றது, நச்சுத்தன்மையற்றது ஆனால், எப்போதும் அன்பும் அக்கறையும் கொண்டது. இந்த உண்மையின் அனுபவம் அவரிடமிருந்து நாம் விலகச் செல்ல அல்ல, மாறாக நெருக்கத்திற்கு அழைத்துச் செல்கின்றது. வாழ்வு தரும் உணவான இயேசு நம்மை உயரிய வாழ்வு நிலைக்கு இட்டுச் செல்கின்றார். அங்கு வாழ்வின் சாதாரண இன்பங்களான பசி, தாகம் இன்றி வாழ்வோம். அப்பம், தண்ணீர் மற்றும் வாழ்வு பற்றிய யோவானின் உருவகங்கள் வழியே இயேசு ஒரே உண்மையை அடையாளப்படுத்திக் குறிப்பிடுகின்றார்; அதாவது இவ்வுண்மையில் மனிதர்களின் பசி, தாகம், மரணம் இவையெல்லாம் அர்த்தமற்றதாகிவிடும். இது மனிதகுலத்திற்கு இயேசுவில், அவர் வழியாய் கொடுக்கப்பட்ட தெய்வீக வெளிப்பாடாகும்.