Arulvakku

10.05.2019 — Participating in the Wisdom

*3rd week in Easter Time, Friday – 10th May 2019 — Gospel: Jn 6,52-59*
*Participating in the Wisdom *
Four times in rapid succession Jesus speaks of the necessity of eating his flesh and drinking his blood. Jesus contrasts the Old Testament banquet, in which Wisdom offers the invitation to “eat of my bread and drink of the wine” (Prov 9,5), with the banquet of his own flesh and blood. This language of Jesus is shocking to his audience, for it implies cannibalism and abhorrent to the Jewish mind (Lev 17,10-14). Jesus being the wisdom par excellence enacts the Old Testament wisdom by giving himself in the form of flesh and blood. Firstly, the result of a believer consuming his flesh and blood is mutual indwelling like that of the wisdom: “Those who eat my flesh and drink my blood abide in me, and in them.” secondly, to eat and drink of his very self is to participate fully in the mission and destiny of Jesus, i.e., wisdom drives forward. Thirdly, eating his flesh and drinking his blood is truly to be his disciple – in following him, believing in him, and giving oneself with him for the life of the world. Being united with Jesus, the embodiment of wisdom, we gain eternal life and victory over death (vv.51, 54, 58).
நான்கு முறை தொடர்ச்சியாக இயேசு தன்னுடைய சதையை உண்டு இரத்தத்தை குடிப்பதன் அவசியத்தைப் பற்றி பேசுகிறார். “வாருங்கள் நான் தரும் உணவை உண்ணுங்கள், நான் கலந்துவைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்” என்ற பழைய ஏற்பாட்டு ஞான இலக்கியத்தின் அழைப்புக்கு முரணாக இயேசு தம் உடலையும் இரத்தத்தையம் விருந்தாக தருகின்றார். இயேசுவின் பேச்சானது அவருடைய பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஏனெனில் யூதர்களின் பார்வையில் நரபலி உண்பது அருவருக்கத்தக்க செயலை குறிப்பதாகும். இயேசு ஞானத்தின் சிறந்த பிரதிபலிப்பாக இருப்பதால், தன்னையே உடலாகவும் இரத்தமாகவும் தருவதில் பழைய ஏற்பாட்டு ஞானத்திற்கு செயல் வடிவம் கொடுக்கிறார். முதலில், அவரது சதையும் இரத்தத்தையும் உண்ணும் நம்பிக்கையாளர் ஞானத்தோடு இணைத்திருப்பது போன்று அவரோடு இணைந்திருப்பார்; ‘என் சதையை உண்டு என் இரத்தத்தை குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.” இரண்டாவது, அவருடைய உடலை உண்டு குடித்து அவரில் கலந்திருப்போர் அவருடைய பணியிலும் இலட்சியத்திலும் பங்கு பெறுவர்; அதாவது ஞானம் முன்னோக்கி இட்டுச் செல்லும். மூன்றாவது, அவருடைய சதையை உண்டு இரத்தத்தை குடித்தால் அவருடைய சீடராவார். அவரைப் பின்பற்றி, நம்பி, அவரைப் போல வாழ்வை இவ்வுலகிற்காக துறக்கும் போது அவரோடு இணைந்து வாழ்கிறோம். ஞானத்தின் வடிவமாம் இயேசுவுடன் ஒன்றித்திருக்கும் போது, நாம் நிலைவாழ்வையும் இறப்பிலிருந்து வெற்றியும் அடைவோம்.