Arulvakku

16.05.2019 — Let knowledge speak out in Service

*4th week in Easter Time, Thursday – 16th May 2019 — Gospel: Jn 13,16-20*
*Let Knowledge speak out in Service *
If you know these things, you are blessed if you do them (Jn 13,17). It is one of the beatitudes of blessedness in the Gospel of John. Knowledge of the things presume Jesus teaching (Jn 13,13-17). But the blessedness depend upon their combining action with knowledge. The disciples had known the truth before, but their knowledge had not profited them, and they needed to be taught again. Having explained to his followers through dramatic action of self-giving and humble service, Jesus exhorts them to put into practice. Conversely, knowing and doing are often dangerously divorced (Mt 7,21; Lk 6,46; Lk 12,47 and Jas 1,25). In fact the negligence of doing is considered as sin (Jas 4,17). Mere admiration of an ethical or Christian principle is degenerating into a heartless and fruitless ceremony that it is hardening to the heart and deadening to the conscience. Jesus emphasizes on doing, for he believes that knowledge letting itself in service will do more good for humanity than merely seeking personal honour or power through information and intelligence.
“இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்” (யோவா 13,17). இது யோவான் நற்செய்தியில் காணும் இன்னொரு பேறுபெற்றோரின் கூற்றாகும். இவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது பற்றி ஏற்கனவே இயேசு அவர்களுக்கு கற்பித்திருந்தார். ஆனால் பேறுபெற்றோராக மாறுவது என்பது அறிவோடு சார்ந்திருக்கின்ற செயலில் வெளிப்படுகிறது. சீடர்கள் உண்மையை அறிந்திருந்தார்கள், ஆனால் அவர்களுடைய அறிவு அவர்களுக்கு பயனளிக்கவில்லை, எனவே மறுபடியும் அவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டியிருந்தது. தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் தற்கையளிப்பு மற்றும் பணிவான சேவையின் மூலம் விளக்கிய இயேசு, அவர்கள் நடைமுறையில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். அறிந்து கொள்வதும் செயல்முறை படுத்துவதும் இணைந்து செல்லாத போது, அவை மிகவும் எதிர்மறையான ஆபத்துக்களாக உருவெடுக்கும். உண்மையில் செயலாக்கத்தை அலட்சியம் செய்வது பாவம் என்று கருதப்படுகிறது. அறநெறி அல்லது கிறிஸ்தவ விழுமியங்களை பெருமையாக மட்டும் கருதுவது, அவற்றை உருக்குலைய உதவும் இதயமற்ற மற்றும் பலனற்ற சடங்காக மாறும். இதனால் இதயம் கடினப்படுத்தப்பட்டு மனச்சாட்சி மழுங்கடிக்கப்படும். இயேசு செயல்முறைக்கு அழுத்தம் கொடுக்கிறார், ஏனெனில், அறிவார்ந்த செயலே இம்மானிடத்திற்கு நிறைவான நல்லது செய்யும் என்று நம்புகின்றார், இல்லையேல் தகவல்களும் அறிவும் வெறும் தனிநபர் கௌரவத்தையும் அதிகாரத்தையும் மையப்படுத்தும்.