Arulvakku

21.05.2019 — Prince of Peace

*5th week in Easter Time, Tuesday – 21st May 2019 — Gospel: Jn 14,27-31*
*Prince of Peace*
The effect of the Spirit’s work within believers is a profound sense of peace. This peace is the farewell gift of Jesus to His disciples. He repeats it with the emphatic “My”, and speaks of it as an actual possession which He imparts to them. “Peace on earth” was the angels’ message when they announced His birth. “Peace to you” was His own greeting when He returned victorious from the grave. These expressions highlight that Christ is the source of peace and brings to fulfillment Isaiah’s prophecy that He is the Prince of peace (Is 9,6). Paul too affirms that “Jesus is our peace” (Eph 2,14). In the sense that Jesus is the mediator of reconciliation between the two races, Jew and gentile. Here peace ends the hostility and forges a new relationship of unity in Christ. Christ alone can mend the broken, hostile relationship between the enemies. Living in Christ one enjoys the inner peace, serenity and also builds unity among his brethren.
ஆவிக்குரிய செயலின் விளைவானது நம்பிக்கையாளர்களுக்கு ஆழ்ந்த அமைதியை உருவாக்குகின்றது. இயேசு அவர்களுடைய சீடர்களை விட்டுப் பிரியும் போது இந்த அமைதியை கொடையாக வழங்குகின்றார். அவர் “என்னுடையது” என்று அழுத்தம் கொடுத்து அதை நிறைவான உடைமையாக பெற்றுக் கொள்ளக் கொடுக்கிறார். வானதூதர்கள் அவருடைய பிறப்பை அறிவித்த போது “உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி” என்று அறிவித்தார்கள். கல்லறையிலிருந்து வெற்றியுடன் வெளியே வந்து சீடர்களை வாழ்த்திய போது “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்றார். இவ்வார்த்தைகள் அமைதியின் மூலாதாரம் கிறிஸ்துவே என்ற அழுத்தத்தைத் தருகின்றன. இதனால் அமைதியின் அரசர் என்ற எசாயாவின் இறைவாக்கை நிறைவு செய்கிறார். பவுலும் “இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர்” என்று வெளிப்படுத்துகிறார். அதாவது, யூதர் மற்றும் பிறஇனத்தார், இவ்விரு இனங்களுக்கிடையே ஒப்புரவின் இடைநிலையாளராக இயேசு திகழ்கிறார் என்ற கருத்தில் வலியுறுத்தியுள்ளார். இங்கே அமைதி, பகைமையை முறிப்பதாகவும் மற்றும் கிறிஸ்வில் புதிய உறவாக இணைவதையும் சுட்டிக் காட்டுகின்றது. கிறிஸ்து ஒருவரே எதிரிகளிடையே உள்ள பகைமையையும் உடைந்த உறவுகளையும் சீர்படுத்துபவர். கிறிஸ்துவினுள் வாழ்பவர் உள்ளார்ந்த அமைதியையும் மற்றும் சகோதர உறவில் ஒற்றுமையையும் பெற்று மகிழ்ந்திருப்பார்.