Arulvakku

23.05.2019 — Experience the energy of divine love

*5th week in Easter Time, Thursday – 23rd May 2019 — Gospel: Jn 15,9-11*
*Experience the energy of divine love *
The energy of divine love moves from the Father to Jesus, Jesus to his disciples and disciples for one another. This is bound in observing the divine commandments. The commandments of Jesus are not to be obeyed out of a sense of obligation or fear; rather they are motivated for love and their purpose is joy. Therefore the energy of divine love is focused to give joy to his believers. Jesus tells his disciples that through his teachings he has given us all a share in his joy: “so that my joy may be in you, and that your joy may be complete.” Scriptures anticipated this joy of fulfillment promising its completeness at the coming of the messianic age. This complete joy is an experience of God’s love. It is the kind of lasting joy that no sadness or hardship in life can take away.
இறையன்பின் ஆற்றல் தந்தையிடமிருந்து இயேசுவுக்கும், இயேசுவிடமிருந்து தம் சீடர்களுக்கும், சீடர்களிடமிருந்து ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டுதலாய் இடம்பெயர்கிறது. இவ்வன்பு கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் பிணைக்கப்பட்டுள்ளது. இயேசுவின் கட்டளைகளை ஒரு கடமையாகவோ அல்லது பயத்தினாலோ கடைப்பிடிக்க வேண்டிய தேவையில்லை. அக்கட்டளைகளைக் கடைபிடிப்போர் அன்பினால் தூண்டப் பெற்றுள்ளனர். அக்கட்டளைகளின் நோக்கம் மகிழ்ச்சியாகும். எனவே இறையன்பின் ஆற்றல் நம்பிக்கையாளருக்கு மகிழ்ச்சியளிப்பத்தில் கவனம் செலுத்துகின்றது. இயேசு தம் போதனைகளின் வழியே அவருடைய சீடர்களாகிய நம் எல்லோருக்கும் அவருடைய மகிழ்ச்சியில் பங்கு உண்டு என்பதை, “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே” என்று வெளிப்படுத்துகிறார். மறைநூலும் வரவிருக்கும் இந்த மகிழ்ச்சியை மெசியாவின் காலத்தில் நிறைவு செய்வார் என்ற வாக்குறுதியை சுட்டிக் காட்டுகிறது. இந்த முழுமையான மகிழ்ச்சி இறையன்பின் அனுபவமாகும். இம்மகிழ்ச்சி நீடித்து நிலைத்து நிற்கும் மகிழ்ச்சியாகும்; இதனை எந்த துயரமும் துன்பங்களும் பிரித்து விடாது.