Arulvakku

24.05.2019 — Friendship creates perpetuity

*5th week in Easter Time, Friday – 24th May 2019 — Gospel: Jn 15,12-17*
*Friendship creates perpetuity *
Jesus makes a clear distinction of relationship between the servant with respect to their master and the relationship among friends. Relationship of servant and master is based on obligation and earned privileges, while the relationship of friends is rooted in freedom and generosity. In transient relationship of earned privileges the servant doesn’t know what his master is doing; it is only an unconscious servitude. Friendship creates perpetuity, consciousness and reciprocal understanding in relationship. This difference could be explained between Moses and Aaron characters. In Aaron it was attention to the ministry at the altar, in Moses it was jealousy for the Divine law. In Aaron it was a regard for reverential barricades of service, in Moses it was spiritual oneness in truth and purity. Jesus upholds a relationship that is conscious, seclusive and everlasting that makes everything available for the mutual up building.
தலைவர் பணியாளர் இவர்களுக்கிடையேயான உறவுநிலையிலும் நண்பர்களுக்கிடையேயான உறவுநிலையிலும் உள்ள தெளிவான வேறுபாட்டை வெளிப்படுத்துகிறார் இயேசு. பணியாளர் தலைவர் உறவுநிலை கடமை மற்றும் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டது. நண்பர்களின் உறவுநிலை சுதந்திரம் மற்றும் பெருந்தன்மையில் வேரூன்றியுள்ளது. சலுகைகளின் அடிப்படையில் ஏற்பட்ட நிலையற்ற உறவுமுறையில், தலைவர் என்ன செய்கிறார் என்று பணியாளருக்கு தெரியாது. இது வெறும் தன்னுணர்வற்ற அடிமைத்தனம் மட்டுமே. நட்பின் உறவுநிலை நிரந்தரத்தன்மை, உணர்வுநிலை மற்றும் பரஸ்பர புரிதலை உருவாக்குகின்றது. இவ்வேறுபாட்டை மோசே மற்றும் ஆரோன் கதாபாத்திரங்கள் விளக்குகின்றன. ஆரோன் பலிபீடத்தின் ஊழியத்திற்கு கவனம் செலுத்தினார், மோசே இறைச்சட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தார். ஆரோன் பயம் கலந்த இறைசேவையில் ஈடுபடுத்திக் கொண்டார், மோசே உண்மையிலும் தூய்மையிலும் இறைமையில் ஒன்றித்திருந்தார். இயேசு உணர்வுநிலை, தனித்துவம் மற்றும் நிலையான உறவுநிலையை ஆதரிக்கிறார். இது எல்லா வித பரஸ்பர உறவுநிலையையும் கட்டியமைக்க உதவுகின்றது.