Arulvakku

28.05.2019 — Dispensed to enlighten forever

*6th week in Easter Time, Tuesday – 28th May 2019 — Gospel: Jn 16,5-11*
*Dispensed to enlighten forever *
The world enjoyed many benefits of Jesus’ presence: healed the sick, raised life, delivered demons, fed the multitudes, taught authoritatively, and loved unconditionally. Now the Ascension of Christ was the occasion of the descent of the comforter. It was necessary that the Son of God and Saviour should dwell upon earth to reveal God to his children and establish a spiritual life of humanity. But when the manifestation was complete, he was withdrawn. Thus the life of sight was replaced by the higher life of Faith. The dispensation of personal presence was replaced by the dispensation of spiritual power. This was actualized through the events of Ascension and Pentecost. The records of this dispensation reform us on how the Spirit has convinced the world of sin, of righteousness, and of judgment. The advantage is that ever since the Lord’s ascension, a Church was established. This new Church never ceased to enjoy the enlightening, quickening, and sanctifying influences of its Comforter.
இயேசுவின் உடனிருப்பின் பல நன்மைகளை இவ்வுலகம் அனுபவித்தது: நோய்வாய்ப்பட்டவர்களைக் குணமாக்குதல், உயிர்ப்பித்தல், அசுத்த ஆவியிடமிருந்து விடுதலையளித்தல், திரளான மக்களுக்கு உணவளித்தல், அதிகாரத்தோடு போதித்தல், மற்றும் நிபந்தனையின்றி அன்பு செய்தல். இப்பொழுது இயேசுவின் விண்ணேற்றம் ஆறுதலானவரைப் பெறுவதற்கு சூழலாக அமைந்துள்ளது. மானிடமகன் மற்றும் மீட்பர் இவ்வுலகில் வந்து, வாழ்ந்து, கடவுளை அவருடைய பிள்ளைகளுக்கு வெளிப்படுத்தி, மனுக்குலத்தின் ஆன்மீக வாழ்க்கையை நிலைநாட்டுவது இன்றியமையாத தேவையாய் இருந்தது. ஆனால் அவருடைய வெளிப்பாடு நிறைவுற்றதும் அவர் திரும்பி விட்டார். இவ்விதத்தில் நேரடியாய் கண்ட வாழ்விலிருந்து காணாத நம்பிக்கையின் உயர்ந்த வாழ்க்கை நிலைக்கு மாற்றம் வந்தது. நேரடி உடனிருப்பின் பகிர்விலிருந்து ஆன்மீக சக்தியின் பகிர்வாக மாற்றம் அடைந்தது. விண்ணேற்றம் மற்றும் பெந்தகோஸ்தே நிகழ்வுகள் மூலம் இவை நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த பகிர்வினால் ஆவியானவர் இவ்வுலகில் பாவம், நீதி, தீர்ப்பு இவற்றை எப்படி சரிசெய்கிறார் என்று அறிந்து கொள்கிறோம். ஆண்டவர் விண்ணேற்றம் அடைந்ததின் மிகப்பெரிய நன்மை புதிய திருச்சபை நிறுவப்பட்டதே. இந்த புதிய திருச்சபை ஆறுதலானவரின் விழிப்பூட்டும், விரைவுபடுத்தும், மற்றும் தூய்மைப்படுத்தும் திறன்களை என்றும் அனுபவித்துக் கொண்டே இருக்கின்றது.