Arulvakku

03.06.2019 — Jesus reproves His disciples for boasting

*7th week in Easter, Monday – 03rd June 2019 — Gospel: Jn 16,29-33*
*Jesus reproves His disciples for boasting*
Jesus’ question, “do you now believe?” (Jn 16,31) echoes his question to Martha at the tomb of Lazarus, “Do you believe this?” (Jn 11,26). Both Martha and the disciples express a wonderful affirmation of faith in Jesus. Martha expressed, “Yes, You are the Messiah, the Son of God, and the one coming into the world“. The disciples affirmed, “Yes, we know that you know all things” and “we believe that you came from God” (Jn 16,30). Yet, in each case, there is much more to be received and understood. In the question of Jesus, he expresses both delight at their faith and a mild rebuke at their self-assurance. For immediately after the disciples’ positive confession of belief comes Jesus’ ominous prediction that the disciples will be scattered and desert him. This questioning, therefore, reproves the disciples for their security, vain confidence and boasting, as if their faith was so very strong that it would never be moved.
“இப்போது நம்புகிறீர்களா?” என்ற இயேசுவின் கேள்வி இலாசரின் கல்லறையில் மார்த்தாவைப் பார்த்து “இதை நீ நம்புகிறாயா?” என்று இயேசு கேட்ட கேள்வியை எதிரொலிக்கிறது. மார்த்தாவும் சீடர்களும் இயேசுவின் மீது கொண்ட உறுதியான நம்பிக்கையை அற்புதமாக வெளிப்படுத்தினர். மார்த்தா “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர்” என்று அறிக்கையிடுகிறார். சீடர்கள், “ஆம், உமக்கு அனைத்தும் தெரியும் என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது; நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்” என்று உறுதிபட கூறினர். இச்சிறப்பான பதில்களில் இன்னும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய மற்றும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய காரியங்கள் அதிகமாக உள்ளன. இயேசுவின் கேள்விக்கான அவர்களுடைய பதிலில் நம்பிக்கைக்கான மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையுடன் ஒரு சாந்தமான கண்டனத்தையும் வெளிப்படுத்துகிறார். சீடர்களைப் பற்றிய ஆக்கப்பூர்வமான நம்பிக்கையை நேர்மறையாக ஏற்றுக்கொண்ட இயேசு, உடனடியாக சீடர்கள் அவரை விட்டு சிதறிப்போவார்கள், மற்றும் விலகிப்போவார்கள் என்ற அச்சுறுத்தும் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துகிறார். ஆகவே, இந்த கேள்வியின் மூலம், அசைக்கமுடியாத உறுதியோடு விளங்கும் சீடர்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பினையும், வீண் நம்பிக்கையையும், தற்பெருமையையும் கடிந்து கொள்கின்றார்.