Arulvakku

05.06.2019 — Pray for the Sanctification of others

*7th week in Easter Time, Wednesday – 05th June 2019 — Gospel: Jn 17,11b-19*
*Pray for the Sanctification of others *
As Jesus departs from the world, he is leaving his disciples behind. His own mission in the world is coming to an end, but that of the disciples is about to begin. Therefore, in this section, Jesus’ prays to the Father for his disciples. He prays, first, that God may “protect them” from evil (vv.11,15). Jesus knows that the disciples will be persecuted by the world, just as he himself was hated by the world (v.14). Yet, Jesus asks the Father not to take them out of the world, but rather to protect them from the evil powers within the world (v.15). Second, he prays that God may “sanctify them” in the truth (vv.17,19). In order to prepare for and succeed in their mission in the world, the disciples must be holy, as God is holy (vv.11,17). This sanctification in the truth involves the work of both the Son and the Holy Spirit. Association with Jesus, the saving truth of God (14,6), will equip the disciples for service in his name. Association with the Spirit, who is the “Spirit of truth” (14,17), will sanctify believers to reveal and serve a “holy Father”.
இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்து செல்லும் போது, தம் சீடர்களைப் பின்னால் விட்டுச் செல்கிறார். உலகில் அவருடைய சொந்த நோக்கம் நிறைவுக்கு வந்த போது, அவர் சீடர்களின் செயலாக்கம் தொடங்குகிறது. எனவே, இப்பகுதியில், இயேசு தம்முடைய சீடர்களுக்காக தந்தையிடம் வேண்டுதல் செய்கிறார். முதலாவதாக, கடவுள் அவர்களை தீமைகளிலிருந்து ‘காத்தருள’ வேண்டுகிறார். உலகம் முழுவதும் இயேசுவை வெறுத்ததைப் போல சீடர்களையும் இவ்வுலகம் துன்புறுத்தும் என்று இயேசு அறிந்திருந்தார். எனவே, இவ்வுலகத்தைவிட்டு அவர்கள் வெளியேறாதபடி தந்தையிடம் கேட்டுக் கொண்டார். மாறாக, அவர்களை உலகிலுள்ள தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்க கேட்டுக் கொள்கிறார். இரண்டாவதாக, கடவுள் அவர்களை உண்மையினால் அர்ப்பணமாக்கியருள செபிக்கிறார். உலகில் தங்களது பணியை தயார் செய்து வெற்றி பெற இச்சீடர்கள் தூய்மையாய் இருக்க வேண்டும், காரணம் நம்முடைய இறைத்தந்தை தூய்மையானவராய் இருக்கிறார். எனவே உண்மையினால் அர்ப்பணமாக்குவது என்பது மகனுக்கும் தூய ஆவியானவர்க்கும் உட்பட்ட பணியை குறிக்கின்றது. மீட்பராம் கடவுளின் உண்மையாம் இயேசுவோடு இணைந்திருந்தால், சீடர்கள் அவருடைய பெயரில் பணி செய்ய ஆற்றல் பெறுவர். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரோடு இணைந்திருந்தால், நம்பிக்கையாளர்கள் தூய தந்தையை வெளிப்படுத்தவும் அவருக்கு பணி செய்யவும் தூய்மையாக்கப்படுவர்.