Arulvakku

07.06.2019 — He has an amazing plan and mission

*7th week in Easter Time, Friday – 07th June 2019 — Gospel: Jn 21, 15-19 *
*He has an amazing plan & mission *
Risen Jesus’ encounter with Peter opens up a new beginning. Jesus forgives and encourages Peter as he had done many times before. He had no intention of letting Peter’s past sins or weaknesses change the mission he had for him. The confidence that Jesus’ encounter with Peter gives is that after every failure or mistake, one must respond to his single question: “Do you love me more than these?” Is Jesus asking whether Peter loves him more than these fish or more than his profession? Is he asking if Peter loves him more than he loves his companions? Or is Jesus asking whether Peter loves him more than his other disciples love him? All three must be true. Peter must have loved Jesus more than he loved other people or his fishing business. He did love Jesus more than the others because he was willing to render extraordinary sacrifice on behalf of his master. For despite Peter’s own betrayals, blunders, and mistakes Jesus has an amazing plan for Peter. He doesn’t judge by the past mistakes, but he sees into our hearts. He sees our potential, and our love.
உயிர்த்த இயேசுவின் சந்திப்பில் பேதுரு ஒரு புதிய சகாப்தத்தை தொடங்குகின்றார். பலமுறை ஏற்கனவே இயேசு அவரை மன்னித்து ஊக்குப்படுத்தியது போன்று இப்பொழுதும் செய்கின்றார். பேதுருவின் கடந்த கால பாவங்களோ அல்லது பலவீனமோ அவருக்கென்று நிர்ணயித்திருந்த பணியை மாற்றி அமைக்கவில்லை. பேதுரு இயேசு இவர்களின் சந்திப்பு நல்ல நம்பிக்கையை தருகின்றது. ஒவ்வொரு தோல்விக்கும் தவறுகளுக்கும் பின்பு நாம் “நீ இவற்றைவிட அதிகமாக நேசிக்கிறாயா?” என்ற ஒரே கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். பேதுரு தம்முடைய மீன்பிடி தொழிலை விட இயேசுவை அதிகம் அன்பு செய்கிறாரா? இயேசுவைவிட தம்முடைய தோழர்களை அதிகமாக நேசிக்கிறாரா? அல்லது மற்றவர்களை விட இயேசுவை அதிகம் நேசிக்கிறாரா? என்று கேட்டிருக்கலாம். மூன்று கேள்விகளும் உண்மையானதே. பேதுரு மற்றவர்களைவிடவும் தம்முடைய மீன்பிடி தொழிலைவிடவும் அதிகமாக இயேசுவை நேசித்திருக்க வேண்டும். அவர் மற்றவர்களைவிட இயேசுவை அதிகமாக நேசிக்கக் காரணம் தன்னுடைய தலைவருக்காக எல்லாவற்றையும் இழக்கத்த துணிந்தது தான். பேதுருவின் மறுதலிப்பையும் தவறுகளையும் குறைகளையும் தாண்டி இயேசு அவருக்கென்று ஒரு அற்புதமான திட்டத்தை வைத்திருந்தார். பழைய தவறுகளுக்காக நம்மை தண்டிப்பவர் அல்ல, மாறாக நம் இதயத்தின் ஆவலை காண விரும்புகிறவர். நம்முடைய அன்பையும் திறமையையும் காண்கிறவர்.