Arulvakku

08.06.2019 — Be content with your calling

*7th week in Easter Time, Saturday – 08th June 2019 — Gospel: Jn 21,20-25*
*Be content with your calling *
The final words of the gospel spotlight the anonymous beloved disciple. Having just focused on the ministry and martyrdom of Peter, the gospel turns to the witness and destiny of the disciple Jesus loved. Unlike Peter who compares, Jesus does not see the need to compare the roles of these two disciples in the emerging church. Peter holds the place of leadership and primacy in the Church; the beloved disciple holds a special place as founder of the community to which this gospel was written. Peter is called to a life of pastoral ministry, followed by martyrdom; the beloved disciple is called to live a long life of faithful witness. Both forms of discipleship are equally valid and important for the Church. Essentially, Jesus is telling all disciples to be content with their own calling and to leave that of others to him. In other words, the future of each disciple is determined only by the will of Jesus and is not a matter of concern or rivalry among the other disciples.
நற்செய்தியின் இவ்விறுதிப் பகுதியில் பெயரிடப்படாத இயேசுவின் அன்புச் சீடரைப் பற்றி அறிகிறோம். பேதுருவின் மறைப்பணியையும் அவருடைய மறைசாட்சியத்தையும் மையப்படுத்தியப் பின்னர் நற்செய்தியானது இயேசுவின் அன்புச் சீடரின் சாட்சியத்தையும் இலக்கையும் வெளிப்படுத்துகிறது. பேதுருவைப் போன்று ஒப்புமைபடுத்தாமல், வளர்ந்து வரும் திருச்சபையில் இவ்விரு சீடர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை இயேசு ஒப்புமையின்றி உணர்த்துகின்றார். பேதுரு திருச்சபையில் தலைமைத்துவமும் முதன்மைத்துவமும் கொண்டிருந்தார். அன்புச் சீடரோ தொடக்க கால குழுமத்தை தன்னுடைய நற்செய்தியின் வழியே கட்டியெழுப்பும் தனித்துவம் பெற்றார். பேதுருவை மேய்ப்பணிக்கு அழைத்து மறைசாட்சியத்தில் நிறைவு செய்;தார். அன்புச் சீடரை உண்மையுள்ள சாட்சியாக நீண்ட வாழ்வு வாழ அழைக்கின்றார். இவ்விரண்டு சீடத்துவ வாழ்வும் திருச்சபைக்கு முக்கியமானதாகவும் சரிசமமானதாகவும் இருக்கின்றன. சொல்லப்போனால், எல்லா சீடர்களையும் அவரவரின் சொந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு வாழ இயேசு அழைக்கின்றார். இதனால், மற்றவர்களின் அழைப்பைப் பற்றிய கவலையை விடுத்து வாழவும் கேட்டுக் கொள்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொரு சீடரின் எதிர்காலம் இயேசுவின் விருப்பத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது; மற்ற சீடர்களின் அக்கறையுடனோ போட்டியோடோ அல்ல.