Arulvakku

11.06.2019 — ‘You are’ is more important

*10th Week in Ord. Time, Tuesday – 11th June 2019 — Gospel: Mt 5,13-16*
*‘You are’ is more important *
By placing “You are” at the head of the sentences (5,13-14), Jesus wishes to tell his disciples that “who they are” is more important before “what they do”. The simple fact that they are with Jesus, they are identified as the salt of the earth and light of the world. In the larger context, ‘You ares’ are the bridge between the Beatitudes (5,1-12) and the commands (5,17-48). The power of the remainder of the sermon flows from this beginning, where the disciples are uniquely identified as the world’s salt and light. In Jesus’ teaching, wholeness stands as God’s gift at the beginning of performance and not at the end. Polemically Jesus’ ‘you ares’ sound in his situation, for now it is no longer the Torah, the temple, Jerusalem, and Israel that are the salt and light of the world but it is the followers of Jesus. The main thing about the salt is that it is different. So with disciples. Their power in the world lies in their difference from it. As salt exists for food, so disciples exist for the world. Earlier Jesus himself had been called the Light of the nations (4,16)’ now the Light passes on his light to his disciples. The disciples when they encounter Jesus they reflect his light into the world. In the commissioning of ‘You ares’ we are sent out to share God’s love with the world.
வாக்கியங்களின் தொடக்கத்தில் “நீங்கள்” என்று இயேசு சீடர்களை அடையாளப்படுத்தி, “அவர்கள் என்ன செய்கிறார்கள்” என்பதை விட “அவர்கள் யார்” என்பதே முக்கியம் என்று இங்கு வலியுறுத்துகின்றார். இயேசுவோடு இணைந்திருப்பதால் அவர்கள் உலகின் உப்பாகவும் ஒளியாகவும் அடையாளம் காணப்படுகிறார்கள். மலைப்பொழிவின் பொதுவான சூழலில், “நீங்கள்” என்பது பேறுபெற்றோர்க்கும் மற்றும் கட்டளைகளுக்கும் இடையே பாலமாக அமைந்துள்ளது. மலைப்பொழிவின் மீதமுள்ள பகுதிகளுக்கு இப்பகுதியே அடிப்படை ஆற்றலாகவும் அமைந்திருக்கிறது; காரணம் சீடர்கள் இங்கு உலகின் உப்பாகவும் ஒளியாகவும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணப்படுகின்றார்கள். இது இயேசுவின் போதனையில், முடிவில் அல்ல மாறாக தொடக்கத்தில் செயல்படுத்துவதே முழுமையின் கொடையாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இயேசுவின் சூழலில் இனி சட்டங்களோ, ஆலயமோ, எருசலேமோ மற்றும் இஸ்ரயேலோ உலகின் உப்பாகவும் ஒளியாகவும் திகழ்ந்திடாது; மாறாக “நீங்கள்” என்பது இங்கு இயேசுவைப் பின்பற்றுவர்களைக் குறிக்கும். உப்பின் தனித்துவம் வித்தியாசமானது என்பது போன்று சீடர்களும் இவ்வுலகில் வித்தியாசமாக வாழவேண்டும். உப்பு உணவுக்கு சுவையூட்டுவது போன்று, சீடர்களும் உலகிற்கு சுவையூட்டல் வேண்டும். இயேசு உலகிற்கு ஒளியாக அனுப்பப்பட்டார், இப்போது சீடர்களுக்கு அந்த ஒளியை அவர் வழங்குகின்றார். சீடர்கள் இயேசுவை அனுபவிக்கும் போது அவர்கள் இவ்வுலகில் பிரகாசமாய் ஒளிர்வார்கள். எனவே அதிகாரம் பெற்ற “நீங்கள்” கடவுளின் அன்பை இவ்வுலகில் பகிர்ந்து வாழ அனுப்பப்படுகிறீர்கள்.