Arulvakku

13.06.2019 — Call for Self-mastery

*10th Week in Ord. Time, Thursday – 13th June 2019 — Gospel: Mt 5,20-26*
*Call for Self-mastery*
The scope of Jesus’ command is good relationship with people, not only with the neighbours (5,23-24) but also with “opponents” (vv.25-26). Jesus shows us that the attitude we carry around are already public acts, real deeds, and as such answerable before the judgement of God. Here Jesus is confronting our more frequent sin of irritable, irascible, temperamental anger – the decision to be angry people. Anger retained or expressed creates havoc and judgement. Jesus obviously calls first for self-mastery. Then he commands the discontinuing of anger and the commencement of some creative alternative. Anger happens and many situations call for it. Everything depends on what one does with his “happening”, and does with it as soon as possible. Anger is often involuntary and at least for a moment legitimate. It is exactly at the birth of anger, Jesus asks us to pay attention to: What will we do with it? Prolong it or master it? Cave into it or creatively use it? Confront the sinner (other) first or confront our own sinful disposition first? Jesus is forbidding the everyday anger that we carry about and by which we hurt so many. But he proposes to look for a moment of confrontation in private (18,15). We can capture Jesus intention in the words of Paul, “Be angry but do not sin; do not let the sun go down on your anger, and do not make room for the devil” (Eph 4,26-27).
இயேசுவின் கட்டளையின் நோக்கம் மக்களுடன் நல்ல உறவை எற்படுத்துவதே: சகோதர சகோதரிகளிடம் மட்டுமல்ல எதிரிகளுடனும் நல்ல உறவை கட்டியெழுப்ப வேண்டும். நம்மிடம் உள்ள மனப்பான்மை எற்கனவே பொதுச் செயல்களாக, உண்மைச் செயல்களாக, கடவுளின் தீர்ப்புக்கு பதிலளிக்கக் கூடியதாக உள்ளது என இயேசு நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். இங்கே இயேசு எரிச்சலூட்டும், சிடுமூஞ்சியை, எதிர்பாராத கோபத்தை, குறிப்பாக கோபத்தின் மக்களாய் வாழ முடிவெடுத்திருப்பது போன்ற – நாம் அடிக்கடி கட்டிக் கொள்ளும் பாவத்தை எதிர்க்கிறார். கட்டுப்படுத்திய அல்லது வெளிப்படுத்தப்படும் கோபமானது வெறுப்பையும் நியாயத்தீர்ப்பையும் உருவாக்குகிறது. முதலில் இயேசு நம்மை அடக்கியாள அழைக்கின்றார். பின்னர் அக்கோபத்தை தடுத்து நிறுத்தவும், மேலும் அதனை நெறிபடுத்தி புதிய படைப்பாக மாற்றவும் கேட்டுக் கொள்கிறார். கோபம் என்பது அன்றாடம் நிகழ்கிறது மற்றும் பல சூழ்நிலைகளில் உருவாகுகிறது. எப்படி நடக்கிறது, எவ்வளவு விரைவாக அது நடந்தேறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கோபம் பெரும்பாலும் விருப்பமில்லாதது, சில வேளைகளில் அது சட்டபூர்வமானதாகும். அதன் பிறப்பின் தொடக்கத்திலே நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று இயேசு நம்மைக் கேட்கிறார். நாம் எப்படி அதை கையாளுகிறோம்? அதை நீட்டிக்கிறோமா அல்லது அடக்கி ஆளுகிறோமா? அதை குடைந்து கொண்டிருக்கிறோமா அல்லது ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறோமா? அடுத்திருப்பவரை குத்திக் காட்டுகிறோமா அல்லது நம் சொந்த பாவ மனநிலையை எதிர்கொள்கிறோமா? பல்வேறு நபரை காயப்படுத்தும் நம்முடைய அன்றாட கோபத்தை இயேசு தடை செய்கிறார். ஆனால் நாம் தனிப்பட்ட முறையிலே பேசித் தீர்த்தது சரிசெய்து கொள்ள விரும்புகிறார். நாம் பவுலின் வார்த்தைகளில் இயேசுவின் சிந்தனையை மேலும் புரிந்து கொள்ளலாம்: “சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள்.”