Arulvakku

14.06.2019 — Called to live in permanent union

*10th Week in Ord. Time, Friday – 14th June 2019 — Gospel: Mt 5,27-32*
*Called to live in Permanent Union*
The second illustration demonstrates that the law against adultery implicitly prohibits lust. Jesus again shows the close relationship of external actions and internal dispositions. His teachings do not contradict the Torah, but rather they clarify its deepest meaning and restore its original divine intention. Lustful desires and coveting the spouse of another are ways of committing adultery in the heart. Jesus’ exaggerations do not advocate bodily mutilation, but stress the importance of doing whatever is necessary to control the natural passions that tend to flare out of control. He extends his teaching on adultery to demonstrate how divorce can also lead to adultery. He contradicts the permissive interpretation of many Jewish teachers who listed numerous reasons for allowing divorce. Jesus’ authoritative teaching is rooted in God’s original intent for marriage as a permanent and inviolable union.
இரண்டாவது விளக்கம் விபச்சாரத்திற்கு எதிரான சட்டம் மறைமுகமாக காமத்திற்கு தடை என்று நிரூபிக்கிறது. மறுபடியும் இயேசு வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் உள்மனநிலைகளுக்கும் உள்ள நெருங்கிய உறவை வெளிப்படுத்துகிறார். அவருடைய போதனைகள் தோராவிற்கு முரணானது அல்ல. மாறாக, அவை அதன் ஆழமான அர்த்தத்தை தெளிவுபடுத்துகின்றன மற்றும் அதன் உண்மையான தெய்வீக நோக்கத்தை மீட்டெடுக்கின்றன. தீவிர காம இச்சைகளும் மற்றவரின் மனைவியை விரும்புவதும் ஒருவரின் இதயத்தில் விபச்சாரம் செய்வதற்கான வழிகளை உண்டு பண்ணும். இங்கு இயேசுவின் மிகைப்படுத்தல்கள் உடல் அழிக்கப்படுவதை ஆதரிக்கவில்லை, ஆனால் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் இயற்கை உணர்வுகளை கட்டுப்படுத்தத் தேவையானதைச் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. மேலும் விவாகரத்து எப்படி விபச்சாரத்திற்கு வழிவகுக்கும் என்பதை வலியுறுத்த விபச்சாரம் பற்றிய போதனைகளை இயேசு இங்கு விரிவுபடுத்துகிறார். இங்கு விவாகரத்து செய்வதற்கு ஏராளமான காரணங்களை பட்டியலிட்ட பல யூத ஆசிரியர்களின் தாராளமய விளக்கத்திற்கு அவர் முரண்பட்டு நிற்கிறார். இயேசுவின் அதிகாரப் பூர்வ போதனை திருமணத்திற்கான கடவுளின் மூல நோக்கத்தில் வேரூன்றியுள்ளது. அதாவது திருமணம் நிரந்தரமானது மற்றும் பிளவுபடாத ஒற்றுமையில் இணைக்கிறது.