Arulvakku

20.06.2019 — The tempter is the devil, not God

*11th Week in Ord. Time, Thursday – 20th June 2019 — Gospel: Mt 6,7-15*
*The tempter is the devil, not God*
The Lord’s prayer originates in Matthew 6,9-13 in which Jesus taught his disciples to pray. In this, Pope Francis has approved a change to Matthew 6,13 that replaces “lead us not into temptation” with “do not let us fall into temptation”. Until now when the believers used this prayer, it implied that God induces us into temptation, instead it is the work of Satan to lead us into temptation and not of God. The Pope said, “The original text portrays God in a false light, as Satan is the ‘one who leads you astray’.” The Pontiff explains, “A father does not lead into temptation, a father helps you to get up immediately.” However, “it is me who falls, not the Lord pushing me into temptation to then see how I have fallen.” James 1,13-14 gives better explanation to this temptation saying that God does not persuade or compel any one to sin by any means whatever. There is no possibility of temptation that ever remains with God. Instead, it our own evil desire that lures and entices us to sin and we look for an opportunity to blame God for our own mistakes. In other words, it is the devil that tempts man and because the devil is continually employed in that malicious work, he is called the tempter.
மத்தேயு 6,9-13ல் இறைத்தந்தையிடம் வேண்டுவதற்கான செபம் தரப்படுகிறது. இதன் மூலம் தம்முடைய சீடர்களுக்கு செபம் செய்ய இயேசு கற்றுக் கொடுக்கிறார். இந்த பாரம்பரிய செபத்தில், மத்தேயு 6,13ல் காணும் “எங்களை சோதனையில் விழ விடாதேயும்” என்ற வாக்கியத்தில் “எங்களை சோதனையில் விழாமல் பாதுகாத்தருளும்” என்ற மாற்றத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் புகுத்தியுள்ளார். இதுவரை இந்த செபத்தை நம்பிக்கையாளர்கள் பயன்படுத்தியபோது, கடவுள் நம்மை சோதிக்கிறார் என்ற அர்த்தத்தை குறித்துக் காட்டியது. அதற்கு பதிலாக, சோதிப்பது சாத்தானின் வேலையே அன்றி, கடவுளின் வேலை அல்ல. “மூலபாடம் கடவுளை தவறான வெளிச்சத்தில் காட்டுகின்றது; ஏனெனில் சாத்தான் தான் நம்மை வழி தவறச் செய்கிறார்” என்று திருந்தந்தை கூறுகிறார். மேலும் “தந்தை சோதனைக்கு உட்படுத்துவதில்லை, நாம் விழுந்த நிலையிலிருந்து உடனடியாக எழுந்திருக்க தந்தை தான் உதவுகிறார்” என்றும் விளக்கமளிக்கிறார் திருந்தந்தை. இருப்பினும் “நான் தான் விழுகிறேன், கடவுள் என்னை சோதனையில் விழச் செய்து நான் எப்படி விழுந்து கிடக்கிறேன் என்று பார்க்க விரும்புவதில்லை.” யாக்கோபு 1,13-14 இச்சோதனை பற்றிய சிறந்த விளக்கத்தை அளிக்கிறது. கடவுள் எந்த நிலையிலும் யாரையும் பாவத்திற்கு வற்புறுத்துவதோ, கட்டாயப்படுத்துவதோ இல்லை என்று கூறுகிறார். கடவுளிடம் சோதனைக்கு உட்படுத்துவதற்கான காரணங்கள் ஏதும் இல்லை. அதற்கு பதிலாக, நம்முடைய சொந்த தீய ஆசைகள் தான் நம்மை பாவத்திற்கு ஈர்க்கிறது மற்றும் கவர்ந்திழுக்கிறது. இதனால் நம்முடைய தவறுகளுக்காக கடவுளைக் குறை கூறும் வாய்ப்பை நாம் தேடுகின்றோம். வேறு வார்த்தைகளில் கூறுவதனால், மனிதனை பிசாசு தான் சோதனைக்கு தூண்டுகிறது. பிசாசு தொடர்ந்து தீங்கிழைக்கும் வேலையில் ஈடுபடுவதால் அவரை சோதிப்பவர் என்றும் அழைக்கிறோம்.