Arulvakku

21.06.2019 — Treasured heart and lighting eyes

*11th Week in Ord. Time, Friday – 21st June 2019 — Gospel: Mt 6,19-23*
*Treasured heart and lighting eyes *
Jesus’ instruction highlights two important parts of the human body: heart and eye. The former is internal and symbolic, while the latter is external and observable. However, both are protective organs: as what one sees or feels may not be precisely known. For Jesus, heart is the source of one’s treasure and eye is the source of radiating light. The link between the heart and eye are long standing. For Plato said, through the medium of the eye, love enters to capture or wound the heart. Heart is identified with one’s understanding, judgement and affections and is manifested through one’s conversation. Eye is related to the whole body and acknowledged for its guidance and conduct. If your eye is healthy, then it directs all the motions of your body right. The eye is the window through which the soul looks out to guide the body. And if your heart is set right, then you have a correct and sound judgment, a true and sanctified affection. Your heart will influence and guide all your actions. Your whole conversation will be regular and holy. If that inward is eye is evil, through covetousness, too much adherence to the earth, or through envy, or through lusts or passions, your darkness will be exceedingly great. Based on the positive and negative interlinking of the eye and heart, either we fall in love or sin, serve God or the devil. The correct reasoning is the heart is the cause of sin, while the eye is the occasion. Ultimately one gains treasure in heaven and walks in the light in the way he uses both his eyes and heart.
இயேசுவின் அறிவுரை மனித உடலின் இரண்டு முக்கிய பாகங்களை எடுத்துக் காட்டுகிறது: இதயம் மற்றும் கண். முந்தையது உட்புறம் மற்றும் அடையாள குறியீடாகும். பிந்தையது வெளிப்புறம் மற்றும் காணக்கூடியது. இருப்பினும் இரண்டும் பாதுகாப்பு உறுப்புகள்: ஒருவர் பார்ப்பதை அல்லது உணர்வதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியாது. இயேசுவைப் பொறுத்தவரை, இதயம் சேமிப்பின் இருப்பிடமாகவும், கண் பிரகாசமான ஒளியின் மூலமாகவும் இருக்கிறது. இதயத்திற்கும் கண்ணுக்கும் இடையிலான தொடர்பு நீண்ட காலமாக உள்ளது. பிளேட்டோ கூறியது, கண்ணின் வழியே அன்பு இதயத்தை கவர்ந்திழுக்கிறது அல்லது காயப்படுத்துகிறது. ஒருவரின் புரிதல், தீர்ப்பிடல் மற்றும் பாசத்துடன் இதயமானது அடையாளம் காணப்படுகிறது மற்றும் உரையாடலின் வழியே வெளிப்படுத்தப்படுகிறது. கண் முழுஉடலுடன் தொடர்புடையது மற்றும் வழிகாட்டுதலுக்கும் நடத்தைக்கும் காரணமாகிறது. உங்கள் கண் ஆரோக்கியமாக இருந்தால், உடலின் அனைத்து இயக்கங்களையும் அது சரியாக இயங்க வைக்கும். கண் என்ற சன்னல் வழியே நம்முடைய ஆன்மா இந்த உடலினை வழிநடத்துகின்றது. உங்கள் இதயம் சரியாக அமைக்கப்பட்டால், நீங்கள் நேரிய மற்றும் நல்ல தீர்மானங்களையும், உண்மை மற்றும் பரிசுத்த அன்பையும் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் இதயம் உங்களுடைய எல்லா செயல்களையும் ஊக்குவித்து வழிநடத்தும். உங்கள் உரையாடல்கள் ஒழுக்கமானதாகவும் புனிதமாகவும் இருக்கும். பேராசை, இவ்வுலக செல்வங்கள், பொறாமை, காம இச்சைகள் மற்றும் உணர்வுகளின் மூலம் உடலின் உள்ளுறுப்பாகிய இதயம் என்ற கண் தீயதாக அமைந்துவிட்டால், வாழ்வே இருள் நிறைந்ததாக அமைந்திடும். கண் மற்றும் இதயத்தின் இணைப்புகளினால் அன்பு அல்லது பாவம் செய்தல், கடவுள் அல்லது சாத்தானுக்கு சேவை செய்தல் என்ற நேர்மறை மற்றும் எதிர்மறை செயல்களில் ஈடுபடுகிறோம். இறுதியில் ஒருவர் விண்ணக புதையலை பெறுவதற்கும் ஒளியின் வழியில் நடப்பதற்கும் அவருடைய இதயத்தையும் கண்களையும் பயன்படுத்தும் விதத்தில் தான் அமைந்துள்ளது.