Arulvakku

22.06.2019 — Love God Radically

*11th Week in Ord. Time, Saturday – 22nd June 2019 — Gospel: Mt 6,24-34*
*Love God radically*
In this section, Jesus points out two obstacles of trusting God: first is wealth and the next is worry. Both the obstacles can be overcome by putting first things first, putting God in our priorities. When we focus our priorities on God, our lives are ruled by his goodness and love. When we give our undivided attention on earthly wealth, it becomes our master and we become its slaves. When we have undue anxiety about life’s necessities, than we lack trust in the Father’s loving care. Through these examples, Jesus teaches trust in God and in deepening one’s faith in God you will be provided with a fuller life. Instead excessive concern about wealth and worry only marginalizes God and the priorities of his Kingdom. As followers of Christ, we cannot serve God with a divided heart. We need to make a radical decision to love God above all things and use all other things only in so far as they fit into that radical love.
இப்பகுதியில் கடவுளை நம்புவதற்கான இரண்டு தடைகளை இயேசு சுட்டிக் காட்டுகிறார். முதலாவது செல்வம், அடுத்தது கவலை. முன்னுரிமை கொடுக்க வேண்டிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் நாம் இந்த இரண்டு தடைகளையும் கடக்க முடியும். கடவுளை முன்னுரிமைப்படுத்தி வாழும் பொழுது, அவருடைய அன்பினாலும் நன்மைத்தனத்தாலும் நம் வாழ்வு ஆட்சி செய்யப்படுகிறது. இவ்வுலக செல்வத்திற்கு அதிக அக்கறை செலுத்தும் போது, செல்வம் நம்முடைய தலைவராகி, நாம் அதன் அடிமைகளாக மாறுகிறோம். நம்முடைய வாழ்வின் தேவைகள் குறித்து அதிக கவலைப்படும் பொழுது கடவுளுடைய பாராமரிப்பில் நம்பிக்கை இல்லாமல் போகிறது. இந்த எடுத்துக்காட்டுகள் மூலம், கடவுளின் மீது நம்பிக்கை வைக்கவும், நம்முடைய நம்பிக்கையை ஆழப்படுத்தவும் இதனால் முழுமையான வாழ்க்கை வழங்கப்படும் என்று இயேசு கற்பிக்கிறார். இதற்கு பதிலாக செல்வம் மற்றும் கவலை பற்றிய அதிகப்படியான அக்கறை கொண்டிருந்தால் கடவுளையும் அவருடைய ஆட்சியையும் ஓதுக்கிவிடுவோம். இயேசுவின் சீடர்களாகிய நாம் பிளவுபட்ட இதயத்தோடு கடவுளுக்குப் பணி செய்ய முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை நேசிக்க ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். மற்ற எல்லாவற்றையும் அந்த தீவிரமான அன்பிற்கு பொருந்தக்கூடிய அளவிற்கு மட்டுமே பயன்படுத்தவும் வேண்டும்.