Arulvakku

24.06.2019 — In patience experience the fullness of time

*The Nativity of St.John the Baptist, Sunday – 24th June 2019 — Gospel: Lk 1, 57-60.80*
*In patience experience the fullness of time *
John’s birth marks the beginning of the great events of salvation. His birthday advanced Jesus in birth by six months and heralded Jesus by proclaiming His coming. Luke, the evangelist, describes that “When the *time* for Elizabeth had *become full* she bore her son John” (Lk 1,57). Henri Nouwen in reference to this special time wrote, Patience dispels clock time and reveals a new time, the time of salvation. It is not the time measured by the abstract objects: units of the clock, the watch, or the calendar, but rather the time lived from within and experienced as full time… All the great events of the Gospel occured in the fullness of time. John’s birth took place when Elizabeth time became full. It is this full time, pregnant with new life that can be found through the disciple of patience. As long as we are the slaves of the clock and the calendar, our time remains empty and nothing really happens. Thus, we miss the moment of grace and salvation. But when patience prevents us from running away from the painful moments and in the false hope of finding our treasure elsewhere, then we can slowly begin to see that fullness of time is already here and that salvation is already taking place. Like John the Baptist and Elizabeth, each Christian is called to proclaim Christ as present and working among us saying: “Now is the acceptable time, now is the day of salvation” (2 Cor 6,2).
யோவானின் பிறப்பு உன்னத வரலாற்று நிகழ்வான மீட்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இயேசுவின் பிறப்பிற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக அவருடைய பிறந்த நாள் அமைந்துள்ளது. அவர் இயேசுவின் வருகையை நற்செய்தியாக முன்னறிவித்தார். லூக்கா நற்செய்தியாளர் “எலிசபெத்துக்கு பேறுகாலம் நெருங்கிய போது அவள் தன் மகன் யோவானைப் பெற்றெடுத்தாள்” (லூக் 1,57) என்று கூறுகிறார். ஹென்றி நோவன் இந்த சிறப்பு நேரத்தைக் குறிப்பிடுகையில், பொறுமை கடிகார நேரத்தை அகற்றி, ஒரு புதிய நேரமான, மீட்பின் நேரத்தை வெளிப்படுத்துகிறது என்று எழுதியுள்ளார். இது சாதாரண பொருள்களான சுவர்க்கடிகாரம், கைக்கடிகாரம் அல்லது காலெண்டர் என்று அளவிடப்படும் நேரத்தைக் குறிப்பதல்ல. மாறாக, அது ஒரு சிறப்பான நேரம், முழுமையாய் அனுபவித்த நேரமாகும். நற்செய்தியின் அனைத்து சிறப்பு நிகழ்வுகளும் இக்காலத்தின் முழுமையில் நிகழ்ந்துள்ளன. எலிசபெத்தின் நேரம் முழுமை அடைந்த போது யோவானின் பிறப்பு நடைபெற்றது. இந்த முழுமையான நேரத்தில் பொறுமை என்ற புதிய வாழ்க்கை நிலை சீடர்களிடம் தொடங்குகிறது. நாம் கடிகாரத்தின் மற்றும் காலெண்டரின் அடிமைகளாக இருக்கும் வரை, நம்முடைய நேரம் வெறுமையாய் இருக்கும், அப்பொழுது சிறப்பு நிகழ்வுகள் எதுவும் நடக்காது. இவ்வாறு நாம் இறையருள் மற்றும் மீட்பின் தருணத்தினை இழக்கிறோம். ஆனால் பொறுமை நம்மிடம் இருக்கும் போது, முழுமையான நேரம் ஏற்கனவே நம்மிடம் உள்ளது என்றும், மீட்பு நம்மிலே நடைபெறுகிறது என்பதையும் மெதுவாகக் கண்டுணர முடியும். இதனால் புதையலை தவறான இடத்தில் கண்டுபிடிக்க ஓடும் நம்பிக்கையிலிருந்து தடுத்து நிறுத்தப்படுகிறோம். திருமுழுக்கு யோவான் மற்றும் எலிசபெத்தைப் போல, ஒவ்வொரு கிறிஸ்தவனும் “இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பின் நாள்” (2 கொரி 6,2) என்று இப்போது நம்மிடையே நிலைத்திருக்கும் கிறிஸ்துவை அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள்.