Arulvakku

04.07.2019 — Faith leads to awesome realization

*13th Week in Ord. Time, Thursday – 4th July 2019 — Gospel: Mt 9,1-8*
*Faith leads to awesome realization *
The faith of a paralytic man and others, those who brought him, compelled Jesus to perform the miracle that would heal the paralytic. They believed and trusted in Jesus because of what they saw him do or what they heard he had done. Through this healing, Jesus brought so much happiness and relief to this paralytic and awesomeness among those who were with him. In fact the passage ends, “… they were struck with awe and glorified God”. Therefore, faith is more than believing, thinking, talking, and having convictions about Jesus. It is an action as pointed by James: “faith by itself, if it is not accompanied by action, is dead” (Jas 2,17). It is something to be lived out in our daily lives and leads us to wonder at an amazing action of God. Faith in Jesus means relying completely on him, trusting in his infinite power. At times, faith brings us to our own realization and leads us to have sincere and lasting repentance for our sins. Every encounter with Jesus in faith brings wholeness of body, mind and spirit. Thus, having faith in Christ helps us to become more like him.

ஒரு முடக்கவாதனின் நம்பிக்கையும், அவரை அழைத்து வந்த மற்றவர்களின் நம்பிக்கையும் இணைந்து, இயேசு வழியாக கட்டாய குணப்படுத்துதலை அற்புதமாக நிகழச் செய்தனர். இயேசு செய்வதைக் கண்டதாலோ அல்லது அவர் செய்ததைக் கேள்விப்பட்டோ அவர்கள் அவரில் நம்பிக்கை கொண்டு தேடி வந்தனர். இந்த குணப்படுத்துதலின் மூலம், இந்த முடக்குவாதமற்றவர் மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகின்றார். அதைக் கண்ட உடனிருந்த மக்கள் கூட்டம் ஆச்சரியமடைந்தனர் என்பதை “கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்” என்று நற்செய்தியாளர் நிறைவு செய்கிறார். எனவே நம்பிக்கை என்பது அடிப்படையாக ஏற்றுக்கொள்வதை விட, சிந்திப்பதை விட, பேசுவதைவிட, இயேசுவில் ஆழமான நம்பிக்கை கொள்வதாகும். இதையே தூய யாக்கோபு “நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றது” (யாக் 2,17) என்று கூறுகிறார். இது நம் அன்றாட வாழ்க்கையில் வாழ வேண்டிய ஒன்று. இது கடவுளின் அற்புத செயலைக் கண்டு வியக்க வைக்கிறது. இயேசுவில் நம்பிக்கை கொள்வது என்பது முழுமையாக அவரை சார்ந்து, அவருடைய எல்லையில்லா சக்தியில் நம்பிக்கை கொள்வதாகும். சில சமயங்களில், நம்முடைய நம்பிக்கை சுய உணர்வு நிலைக்கு அழைத்துச் செல்லும். மேலும் நம்முடைய பாவங்களுக்கான நேர்மையான மற்றும் நீடித்த மனந்திரும்புதலுக்கு நம்மை இட்டுச் செல்லும். நம்பிக்கையில் இயேசுவுடன் ஏற்படுத்தும் ஒவ்வொரு சந்திப்பும் உடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கு முழுமையைத் தருகிறது. இதனால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வது அவரைப் போலவே மாற நமக்கு உதவுகிறது.