Arulvakku

06.07.2019 — Becoming new in Jesus

*13th Week in Ord. Time, Saturday – 6th July 2019 — Gospel: Mt 9,14-17*
*Becoming new in Jesus*
Jesus did not come to patch up the old religious system of Judaism with its rules and traditions. His purpose was to bring in something new. His gospel did not fit into the old and rigid system, but it needed a fresh start. The two metaphors about patching garments and about wine and wineskins express the reality that the coming of the Messiah has brought the old law and the prophets of Israel to a new and decisive fulfillment. These images highlight the radical newness of the kingdom of God, which Jesus was trying to usher. His good news of ‘God with us’ changed everything. God, in becoming flesh, was doing something new: he was not just patching up his creation but totally transforming it. He expected his people to become new wineskins, i.e., to renew their life from within. He did not want them to patch up their former relationship with God. Jesus’ way follows the interior law of love, not just an exterior adherence to the disciplines of the written law. His way is quite different and new, for he brought his people to a new relationship, a new age of joy and liberation.
யூத மதத்தின் பழைய அமைப்பு, அதன் விதிகள் மற்றும் மரபுகளுடன் ஒட்டுபோட இயேசு வரவில்லை. புதிதாக ஒன்றைக் கொண்டு வருவதே அவரது நோக்கம். அவருடைய நற்செய்தி பழைய மற்றும் இறுக்கமான அமைப்புக்குள் பொருந்தவில்லை. ஆனால் அதற்கு ஒரு புதிய தொடக்கம் தேவையாய் இருந்தது. பழைய சட்டத்தையும் இஸ்ரயேலின் இறைவாக்குகளையும் இயேசு மெசியா தன்னுடைய வருகையால் புதிய மற்றும் தீர்க்கமான நிறைவுக்கு கொண்டு வந்துள்ளார். இதனை துணிக்கு ஒட்டு போடுதல் மற்றும் திராட்சை இரசம் ஆகிய உருவகங்கள் வழியாக வெளிப்படுத்துகிறார். இவ்வுருவகங்கள் இயேசுவின் இலட்சியக் கனவான இறையாட்சியின் புதிய தன்மையை எடுத்துக் காட்டுகின்றன. “கடவுள் நம்மோடு” என்ற நற்செய்தி எல்லாவற்றையும் மாற்றியது. மனுவுருவான கடவுள் புதியனவற்றை உருவாக்கினார். அக்கடவுள் இவ்வுலக படைப்பில் ஒட்டுபோட விரும்பவில்லை, மாறாக முழுமையாக உருமாற்றினார். புதிய திராட்சை இரசமாக தம் மக்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தார், அதாவது அவர்களின் வாழ்க்கையை உள்ளிருந்து புதுப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. கடவுளுடனான முந்தைய உறவு நிலையில் அவர்கள் ஒட்டுபோட்டுக் கொள்வதை இயேசு விரும்பவில்லை. இயேசுவின் புதிய வழி எழுதிய சட்டத்தின் வெளிப்புற ஒழுக்க வரையறை அல்ல, மாறாக உள் சட்டத்தின் அன்பின் வெளிப்பாடாகும். அவரது வழி மிகவும் புதியது மற்றும் வித்தியாசமானது, ஏனென்றால் அவர் தனது மக்களை ஒரு புதிய உறவு நிலைக்கும், மகிழ்ச்சி மற்றும் விடுதலையின் புதிய யுகத்திற்கும் கொண்டு சேர்த்தார்.