Arulvakku

08.07.2019 — Steadfast faith

*14th Week in Ord. Time, Monday – 8th July 2019 — Gospel: Mt 9,18-26*
*Steadfast faith *
In today’s gospel, the story of healing the woman with hemorrhage is embedded in the story of raising the daughter of the synagogue official. In both these accounts, we see Jesus’ power over death and illness, as He becomes healer and giver of life. It is also an image of God’s mercy and love. In these stories two different persons, the official and the suffering women, approach Jesus in a unique way and each seek healing by different means. However what unites them is that each has tremendous faith in Jesus that leads to touch as a means of healing. We can draw on two points from these stories. Firstly, it is never too late to ask for God’s help. The women touched Jesus after 12 years and the official approached after his daughter’s death. Jesus who raised the little girl awakens hope from the nightmares of helplessness and sadness. Secondly, nobody is anonymous in Jesus’ eyes. He wants to look at our faces as He looked at the face of that suffering woman. Jesus not only heals her but praises her courage in taking such a risk.
இன்றைய நற்செய்தியில் இரத்தப்போக்கிலிருந்து குணம் பெறும் பெண்ணின் கதையின் ஊடே தொழுகைக்கூட தலைவரின் மகள் உயிர்த்தெழும் கதையும் பொதிந்துள்ளது. இந்த இரண்டு வர்ணனைகளிலும் இயேசு இறப்பின் மீதும் நோயின் மீதும் சக்தி கொண்டவர் என்பதை காண்கிறோம், மேலும் அவரே குணமளிப்பவராகவும் வாழ்வளிப்பவராகவும் மாறுகின்றார். இது கடவுளின் இரக்கம் மற்றும் அன்பின் உருவமாகும். இந்த இரண்டு கதைகளில் இரு வேறு நபர்களான, தலைவரும் துன்புறும் பெண்ணும், இயேசுவை தனிப்பட்ட முறையில் சந்திக்கின்றனர். இருவரும் வௌ;வேறு வழிகளில் குணமடைய விரும்புகின்றனர். இவ்விரண்டிலும் உள்ள ஒற்றுமை அவர்கள் இருவரும் இயேசுவின் மீது கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையில் தொடுதல் என்பது குணப்படுத்தும் வழிமுறையாக வெளிப்படுகிறது. இக்கதைகளிலிருந்து இரண்டு கருத்துக்களை பெறலாம். முதலாவதாக, கடவுளின் உதவியைக் கேட்க ஒருபோதும் தாமதிக்கத் தேவையில்லை. 12 ஆண்டு இரத்தப்போக்கிற்குப் பின் அப்பெண் இயேசுவை தொட்டாள், தொழுகைக் கூடத்தலைவர் தன்னுடைய மகள் இறந்த பின் இயேசுவை நாடினார். சிறுமியை உயிர்ப்பித்த இயேசு உதவியற்ற மற்றும் சோகத்தின் கனவுகளில் வாழ்வோருக்கு நம்பிக்கையின் தூண்டுகோலாய் திகழ்கிறார். இரண்டாவதாக, இயேசுவின் பார்வையில் ஆதரவற்றோர் என்று யாருமில்லை. அவர் துன்பப்பட்ட அப்பெண்ணின் முகத்தை கூர்ந்து நோக்கியது போல, நம்முடைய முகங்களையும் காண விழைகிறார். இயேசு அப்பெண்ணை குணப்படுத்தியதோடு ஆபத்தான சூழலில் அவர் மேற்கொண்ட துணிச்சலுக்காய் அவரைப் புகழ்ந்தார்.