Arulvakku

09.07.2019 — Crisis in Leadership

14th Week in Ord. Time, Tuesday – 9th July 2019 — Gospel: Mt 9,32-38

Crisis in leadership

In two metaphors, Jesus manifests the crisis in leadership as compassion for the crowds. The first conveys their lack of leadership (10,36). As Moses chose Joshua to continue his mission “so that the congregation of the Lord may not be like sheep without a shepherd” (Num 27,17), Jesus chooses his twelve disciples because they are “like sheep without a shepherd”. Ezekiel describes the leadership crisis after the exile as scattered and aimless, “My sheep were scattered over all the face of the earth, with no one to search or seek for them” (Ezek 34,6). As in the days of old, God’s people in Jesus’ time are helpless and abandoned by their leaders. The second metaphor states the urgency of the situation (10,37) that calls for leadership need. The agricultural imagery of the harvest is rooted in the message of the prophets. God’s slow work of ploughing and sowing the field throughout the saving history of Israel has now reached its climactic time of harvest. The time for gathering God’s people into the kingdom has arrived, but there is a shortage of labourers. This need to mobilize the leaders for the harvest leads Jesus to commission the twelve disciples.

தலைமைத்துவத்தின் நெருக்கடியை, தம்மைச் சார்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தின் மேல் காட்டும் பரிவாக, இரண்டு உருவகங்களில் இயேசு வெளிப்படுத்துகின்றார். முதலாவது உருவகம், மக்களிடையே நிலவும் தலைமைத்துவமின்மையை வெளிப்படுத்துகிறது. மோசே தன்னுடைய பணியை தொடர யோசுவாவை தேர்ந்தெடுத்த போது “இதனால் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பு மேய்ப்பனில்லா ஆடுகளாக இராது” என்றார். அது போல இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களைத் தேர்வு செய்யும் போது “அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்” என்கிறார். எசேக்கியேலும் நாடுகடத்தப்பட்ட பின்னர் இஸ்ரயேல் மக்களிடையே ஏற்பட்ட தலைமை நெருக்கடியை “பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது: அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்” என்று விவரிக்கிறார். பழைய ஏற்பாட்டின் நாட்களைப் போலவே, இயேசுவின் காலத்திலும் இறைவனைச் சார்;;ந்திருக்கும் மக்களின் தலைவர்களால் அவர்கள் உதவி மறுக்கப்பட்டு கைவிடப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். இரண்டாவது உருவகம், தலைமைத்துவ தேவைக்கு விடுக்கும் அழைப்பின் சூழ்நிலையையும் அவசரத்தையும் கூறுகிறது. இறைவாக்குச் செய்திகளில் அறுவடை சார்ந்த விவசாய உருவங்கள் வேரூன்றியுள்ளன. இஸ்ரயேல் மக்களின் மீட்பின் வரலாற்றை கடவுள் படிப்படியாக உழுது பண்படுத்தி, விதைகள் விதைத்து, இப்பொழுது அது அறுவடை காலத்தை எட்டியுள்ளது. கடவுளின் மக்களை இறையாட்சிக்குள் சேர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது; ஆனால் பணியாளர்களுக்கோ பற்றாக்குறை. பன்னிரண்டு சீடர்களை இயேசு நியமிப்பதற்கான காரணம் அறுவடையின் தேவைக்கு அவர்கள் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக.