Arulvakku

13.07.2019 — Leap beyond fear

14th Week in Ord. Time, Saturday – 13th July 2019 — Gospel: Mt 10,24-33

Leap beyond fear

“Fear not” is thrice spoken by Jesus as he sends out his disciples on a mission (10,26.28.31). Each occurrence is enforced by a reason. In the first, Jesus emboldens them to have complete confidence in proclaiming God’s kingdom. What Jesus has taught them privately must be proclaimed openly. The gospel is not a secret or esoteric message. What has been whispered in the darkness must come into the light and be proclaimed to all. Second reason for fearlessness is the limitation of enemy’s power to hurt. Since the disciples share the fate of their master, they should not fear their inevitable persecution and even martyrdom, because God will not allow their ultimate harm. The last reason for fearlessness touches a tender chord, and discloses a gracious thought of God as Father. The disciples must have a proper fear of God, but also to realize how valuable they are to God. God our Father is immanent in nature and because of that sonship, we are of more value than many sparrows. Just as God watches over every sparrow and numbers every hair on a person’s head, God’s unwavering commitment enables them to trust God for their eternal welfare. Disciples of Jesus, therefore, must live to leap beyond fear.

இயேசு தம்முடைய சீடர்களை பணிக்கு அனுப்பும் போது மூன்று முறை “அஞ்ச வேண்டாம்” என்று அறிவுறுத்துகின்றார். ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தை வெளிப்படுத்துகின்றார். முதலாவதாக, கடவுளுடைய இறையாட்சியை அறிவிப்பதில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இயேசு அவர்களை ஊக்கமூட்டுகின்றார். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இயேசு கற்பித்தவை இப்போது வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். நற்செய்தி ஒரு ரகசியமோ அல்லது சிறு குழுவுக்கு மட்டுமே உரிய செய்தி அல்ல. மாறாக, இருளில் இரகசியமாய் சொல்லப்பட்டவை வெளிச்சத்திற்கு வந்து அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டும். அச்சமின்மைக்கான இரண்டாவது காரணம், எதிரியின் சக்தியான பிறரை காயப்படுத்துவதை நிராகரிப்பதாகும். தலைவரின் பணி வாழ்வில் சீடர்கள் பங்குகொள்வதால், அவர்களுக்கு ஏற்படும் தவிர்க்க முடியாத துன்புறுத்தலுக்கும் தியாகத்திற்கும் அச்சப்படத் தேவையில்லை. காரணம் கடவுள் அவர்களுக்கு முடிவற்றத் துன்பங்களை அனுமதிக்கமாட்டார். அச்சமின்மைக்கான இறுதி காரணம், தந்தையாம் கடவுளின் கருணையுள்ளத்தை வெளிப்படுத்துகிறது. அதாவது இது ஒரு மென்மையான இசைநாதம் போல் தொடர்கிறது. சீடர்கள் கடவுளிடம் சரியானதொரு அச்சத்தைக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், கடவுளின் பார்வையில் நாம் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதையும் உணர வேண்டும். நம்முடைய தந்தையாம் கடவுள் இயற்கையில் அசாத்தியமானவர்; நாம் அவருடைய மகன்களாய் இருப்பதால், சிட்டுக் குருவிகளைவிட நமக்கு அதிக மதிப்பளிக்கிறார். ஒவ்வொரு சிட்டுக் குருவியையும் கடவுள் கண்காணிப்பது போல, ஒருவரின் தலைமுடி எண்ணப்படுவது போல, இவற்றின் நித்திய நலனுக்காக கடவுள் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத பராமரிப்பு அர்ப்பணம், அவரை முழுமையாக நம்புவதற்கு உதவுகின்றது. எனவே, இயேசுவின் சீடர்கள் அச்சத்தைக் கடந்தவர்களாக வாழவேண்டும்.