Arulvakku

15.07.2019 — Challenges in the Kingdom

15th Week in Ord. Time, Monday – 15th July 2019 — Gospel: Mt 10,34-11,1

Challenges in the Kingdom

The gospel today presents a situation in which one has to choose between one’s family and faith. We need to be loyal to God primarily than our thickest blood relationships. Jesus also teaches his disciples that the message of God’s kingdom is confrontational. Conflicting responses to that kingdom can splinter the closest human bonds. Disciples must be willing to subordinate their allegiance to what they love best, i.e., even their own family, for the sake of Jesus and his mission. Jesus’ purpose is not to create division, but his coming has inevitably incited conflicting responses. In essence, discipleship means to take up the cross and follow Jesus, which is the way to true and everlasting life.  

இன்றைய நற்செய்தி ஒருவரின் குடும்பத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையே ஒருவர் தெரிவு செய்ய வேண்டிய சூழ்நிலைகளை முன்வைக்கின்றது. நம்முடைய நெருக்கமான இரத்த உறவுகளை விட கடவுளுக்கு நாம் முதன்மைத்துவம் அளிக்க வேண்டும். இறையாட்சி பற்றிய போதனையில் சவால்கள் நிறைந்துள்ளன என்று இயேசு தம்முடைய சீடர்களுக்கு கற்பிக்கிறார். இந்த இறையாட்சிக்கு  முரண்பட்ட பதில்கள் மிக நெருக்கமான மனித இணைப்புகளை பிளவுபடுத்தும். இயேசுவின் சீடர்கள் அவருக்காகவும் அவருடைய பணிக்காகவும் தாங்கள் மிகவும் நேசிப்பதை, அதாவது தங்கள் குடும்பத்தினரைக் கூட, விட்டுக் கொடுக்கத் தயராக இருக்க வேண்டும். எனவே இயேசுவின் நோக்கம் பிளவுகளை உருவாக்குவது அல்ல, மாறாக அவருடைய வருகை தவிர்க்க முடியாத முரண்பட்ட பதில்களைத் தூண்டியுள்ளது. இரத்தினச் சுருக்கமாக, சீடத்துவம் என்பது சிலுவையை எடுத்துக் கொண்டு இயேசுவை பின்பற்றுவதாகும். இதுவே உண்மையான மற்றும் நிலையான வாழ்வுக்கான வழியாகும்.