Arulvakku

29.07.2019 — Martha as loving disciple

17th Week in Ord. Time, Monday – 29th July 2019 — Gospel: Jn 11,19-27

Martha as loving disciple

As soon as Martha heard the arrival of Jesus, she ran to him to give an affectionate and warm welcome. It is her love for Jesus that made her to do so and even request Jesus to do something for her brother after his death. Jesus too loved Martha, Mary and others and manifested with His visit to their house in Bethany. Martha had deep faith in Jesus and hoped that the Lord would cure her brother while he was on his death bed. But to her and everyone’s surprise, Jesus goes one step further and raises the dead man to life. Through the example of Lazarus, Jesus explains of God’s love that is associated with life beyond. Death is only a transition to a higher life. Through resurrection one enters into a new relationship with God the Father, who is all powerful and love. Martha who loved and believed in Jesus made possible this mystery of resurrection here on earth. For which she could be presented as a loving disciple of Jesus.

இயேசுவின் வருகையை மார்த்தா கேட்டவுடனே அவரை உள்ளன்போடு வரவேற்க அவரை நோக்கி ஓடினாள். இயேசுவின் மீதான அவளுடைய அன்பு தான் இவ்வாறு அவளை செய்யத் தூண்டியது. மேலும் இறந்த தம் சகோதரனுக்காக ஏதாவது செய்யும்படி இயேசுவை வற்புறுத்தினார். இயேசுவும் மார்த்தா, மரியா மற்றும் அவருடைய குடும்பத்தாரை நேசித்தார். இதனை வெளிப்படுத்த அவர்களின் பெத்தானியா வீட்டிற்கு வருகை தந்தார். மார்த்தா இயேசு மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இதனால் அவர் தனது சகோதரன் மரண படுக்கையில் இருக்கும் போதே குணப்படுத்துவார் என்று முழுமையாக நம்பினார். ஆனால், இயேசுவோ ஒரு படி மேலே சென்று அவளையும் மற்ற அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இறந்த மனிதனாக அவரை உயிர்ப்பிக்கிறார். இலாசரின் உதாரணம் மூலம், கடவுளின் அன்பு இவ்வாழ்வை கடந்து ஒன்று என்பதை இயேசு விளக்குகிறார். மரணம் என்பது உயர்ந்த வாழ்விற்கான மாற்றமே. உயிர்த்தெழுதலின் மூலம் ஒருவர் மிகவும் அன்பான மற்றும் சக்தி வாய்ந்த தந்தையாம் கடவுளுடன் ஒர் புதிய உறவில் நுழைகின்றார். இயேசுவை நேசித்து நம்பிய மார்த்தா இப்பூமியில் உயிர்த்தெழுதலின் மறையுண்மையை சாத்தியமாக்கினார். இதற்காக அவளை இயேசுவின் அன்பான சீடத்தி என்று முன்னிறுத்தலாம்.