Arulvakku

30.07.2019 — The righteous shine like the light

17th Week in Ord. Time, Tuesday – 30th July 2019 — Gospel: Mt 13,36-43

The righteous shine like the Light

The parable focuses on the final judgement: the judgement of God ‘at the end of the age’. This judgement transcends all boundaries of space and time. Harvest-time is a frequent image for the last judgement in both the OT and the NT. The image of fire is used for the punishment of sin (Mt 3,10.12; 5,22; 7,19), which denotes suffering in ‘the age to come’ (12,32). The terrible finality of God’s judgement highlights that only the truth matters. If the present truth is that we are caught up in sin, and we admit it and seeking God’s mercy and forgiveness, he will heal us. If we stubbornly refuse to acknowledge our sin, all we can expect is to continue living a life now and to end up destroying our lives. In both we are called to repentance while there is still time. All evildoers, including Jesus disciples, will suffer the same fate as unbelieving Israel. While the true disciples, designated as “the righteous” will share the divine glory, and will be transformed into beings of light (Dan 12,3). The allegorical interpretation seems to shift the parable’s center of gravity from the need for patient and tolerance with the weeds to the fearful judgement to come.

இந்த உவமை இறுதித் தீர்ப்பில் கவனம் செலுத்துகிறது: கடவுளின் தீர்ப்பு “இவ்வுலக இறுதி நாளினை” முன்னிறுத்துகிறது. இத்தீர்ப்பு இடம் மற்றும் காலங்களை கடந்து அனைத்து எல்லைகளையும் தாண்டி நிற்கிறது. அறுவடை நேரம் என்ற உருவம் அடிக்கடி பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இறுதித் தீர்ப்பினை குறிப்பதாய் அமைந்துள்ளது. நெருப்பின் உருவம் பாவத்தின் தண்டனைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது வரவிருக்கும் துன்பத்தினை குறிக்கிறது. கடவுளின் தீர்ப்பின் கொடூரம் இறுதியில் உண்மை மட்டுமே முக்கியம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. தற்போதைய உண்மை என்னவென்றால், நாம் பாவத்தில் சிக்கியுள்ளோம், அதை ஏற்றுக் கொண்டு கடவுளின் இரக்கத்தையும் மன்னிப்பையும் நாடினோம் என்றால் அவர் நம்மை குணமாக்குவார். நம்முடைய பாவத்தை ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக மறுத்தால், இப்போது நாம் தொடர்ந்து வாழ்ந்தாலும், நம் வாழ்க்கை அழிவில் முடிவடையும். இந்த இரண்டு சூழலிலும் நாம் இறுதிவரை மனந்திரும்ப அழைக்கப்படுகிறோம். எல்லா நெறிகெட்டவர்களும், இயேசுவின் சீடர்கள் உட்பட, நம்ப முடியாத இஸ்ரயேலர் அனுபவித்த அதே நிலையை அனுபவிப்பர்.  “நீதிமான்கள்” என்று கருதப்பட்ட உண்மை சீடர்கள் தெய்வீக மகிமையில் பங்கு கொள்வார்கள்; மேலும் ஒளியின் மனிதர்களாக திகழ்வார்கள். இந்த உருவக விளக்கத்தின் ஈர்ப்பு மையம் களைகளை பொறுமையாக மற்றும் சகிப்புத்தன்மையுடன் அணுகுவதிலிருந்து அச்சமூட்டும் இறுதித் தீர்ப்பிற்கு இடம் பெயர்வதை காணலாம்.