Arulvakku

14.08.2019 — Fraternal corrections

St.Maximilian Maria Kolbe, Wednesday – 14thAugust 2019 — Gospel: Mt 18,15-20

Fraternal corrections

Correcting others is necessarily a delicate task. Today’s theme shifts from yesterdays, the weak person who strays from the community to the “brother” who sins within the community. Here Jesus conveys to us about how to handle conflict with others. He asks us to care deeply for the person who has hurt us. Today’s passage lays down a carefully ordered procedure for Church-discipline, developed from Lev 19,17-18 and Deut 19,15. In the first place, Jesus invites us to care for the person who has hurt us by talking, discussing the injury privately, and trying to resolve our differences. Secondly, if the person does not respond, Jesus says we may ask someone else to moderate it.  And thirdly, if need be bring it to the Church. If none of these works, we are asked to simply avoid that person. We are not asked to talk about that person or carry the injury for years. Jesus asks us to behave in a radically different way. We are asked to take our role as victim and to transform ourselves and our hurt through prayer.

மற்றவர்களை திருத்துவது என்பது ஒரு மென்மையான பணியாகும். இன்றைய கருத்து நேற்றைய கருத்திலிருந்து மாறுபட்டது, சமூகத்திலிருந்து விலகிச் செல்லும் பலவீனமான நபரிடமிருந்து மாறி சமூகத்திற்குள் பாவம் செய்யும் சகோதரனை மையப்படுத்துகிறது. இங்கு மற்றவர்களுடன் ஏற்படும் மோதலை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி இயேசு நமக்கு உணர்த்துகிறார். நம்மை காயப்படுத்திய சகோதரருடன் அன்பாய் நடந்து கொள்ளும்படி அவர் கேட்கிறார். இன்றைய பகுதி திருச்சபை ஒழுக்கத்திற்கான கட்டளைகளை, லேவி 19,17-18 மற்றும் இணை 19,15 ஆகிய பகுதிகளிலிருந்து உருவாக்கப்பட்டதை காட்டுகிறது. முதலில், தனிப்பட்ட முறையில் பேசுவது, விவாதிப்பது இவற்றின் மூலம் நம்முடைய வேறுபாடுகளை களைந்து நம்மை காயப்படுத்திய நபருடன் உறவினை சரிசெய்து கொள்ள இயேசு நம்மை அழைக்கிறார். இரண்டாவது. அந்த நபர் அதை ஏற்றுக் கொள்ளாத நிலையில், வேறொரு சாட்சிகளுடன் அதைப் பகிர்ந்து சமரசம் செய்து கொள்ள இயேசு கூறுகிறார். மூன்றாவதாக, தேவைப்பட்டால் திருச்சபைக்கு கொண்டு வாருங்கள் என்றும் கூறுகிறார். இது எதுவும் செயல்படவில்லை என்றால், அந்த சகோதரரை வெறுமனே தவிர்க்கும்படி கேட்கிறார். அந்த நபரைப் பற்றி பேசவோ அல்லது காயங்களை சுமந்து கொள்ளவோ அறிவுறுத்தவில்லை. மாறாக மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார். அதாவது நாம் பாதிக்கப்பட்டவராக மாறி, செபத்தின் மூலம் நம்மையும் நம்முடைய காயங்களையும் மாற்றும்படி விரும்புகிறார்.