Arulvakku

15.08.2019 — Mary’s praises of God, the Saviour

Assumption of the B.V.M, Thursday – 15th August 2019 — Gospel: Lk 1,39-56

Mary’s praises of God, the Saviour  

In today’s reading, Elizabeth praises Mary in the first part (1,39-45), while Mary praises God in the second (1,46-56). The canticle of Mary links between what God has done for one individual to what he will do for the structures of society at large. From thankfulness for what God has done for her, Mary turns to contemplation of God himself (49-50). She dwells on three of His characteristics: His power, His holiness and His mercy. She sees herself as insignificant, but the mighty one is at work. Only because of past tenses which speak out God’s deeds is there a gospel to proclaim. God is not to be thought of only in terms of power, for He is holy, i.e., wholly separate and distant. The name in antiquity stood for the whole person. God’s name is a holy name and must be used reverentially. He is merciful, especially for those who are afflicted. In every generation his mercy is certain for those who revere Him.

The song also tells of a complete reversal of human values (51-53). It is God who effects this reversal of the society. It is not the proud or the mighty or the rich with whom is the last word. Indeed, through the incarnation of the Messiah, God is about to overthrow all these. The proud are those who have arrogance in their heart and mind. The mighty are those actually ruling and seated on the thrones. There is a revolutionary note about filling the hungry and sending the rich away empty. Mary sings the praises of a God who is not bound by what men do. The God who is mighty, holy and merciful turns upside down the human attitudes and the order of the society. Therefore Mary sings of God’s help for His people (54-56). She is saying that God’s action in Messiah is not completely new, but a continuation of His mercy to Abraham and of His promises to the fathers of old. Thus, she envisages a God who is not only her Saviour, but the Saviour of the universe.

இன்றைய வாசகத்தில் முதல் பகுதியில் எலிசபெத் மரியாளைப் புகழ்கிறார் (1,39-45). இரண்டாவது பகுதியில் மரியாள் கடவுளைப் புகழ்கிறார் (1,46-56). மரியாளின் இப்புகழ் பாடல் தனிநபருக்கு கடவுள் என்ன செய்திருக்கிறார் என்பதையும் சமூகத்தின் கட்டமைப்புகளுக்கு அவர் என்ன செய்வார் என்பதையும் இணைக்கிறது. கடவுள் தனக்கு செய்த காரியங்களுக்காக நன்றி செலுத்துகின்ற போது அவள் கடவுளைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார் (49-50). கடவுளின் மூன்று குணங்களை வெளிப்படுத்துகிறாள்: அவருடைய வலிமை, தூய்மை, இரக்கம். அவள் தன்னை ஒதுக்கப்பட்டவளாக கருதுகிறாள்; இருப்பினும் கடவுளின் வல்ல செயல் நடந்தேறுகிறது. கடவுளின் கடந்த கால செயல்களை பேசுவதால் மட்டுமே நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. கடவுளை அதிகாரத்தின் அடிப்படையில் மட்டுமே கருதக்கூடாது; ஏனெனில் அவர் தூயவர், அதாவது முற்றிலும் தொலைவில் நின்று தனித்து இருப்பவர். பழங்காலத்தில் பெயர் என்பது தனி நபரின் அடையாளமாய் இருந்தது. கடவுளின் பெயரோ தூயவர், எனவே பக்தியுடன் பயன்படுத்த வேண்டும். அவர் இரக்கமுள்ளவர், குறிப்பாக துன்பப்படுவோரிடம் இரக்கம் காட்டுபவர். ஒவ்வொரு தலைமுறையிலும் அவரைப் போற்றுகிறவர்களுக்கு அவருடைய கருணை நிச்சயம்.

இப்பாடல் மனித விழுமியங்கள் புரட்டிப் போடப்படுவதையும் எடுத்துக் கூறுகிறது (51-53). இச்சமூக மாற்றத்தை உருவாக்குபவர் கடவுளே. தற்பெருமையுடையோர் அல்லது வலிமையுடையோர் அல்லது பணக்காரர் இவர்களே என்றும் மேலோங்கியவர்கள் அல்ல. உண்மையில் மெசியாவின் மனுஉருவாக்கம் மூலம் கடவுள் இவற்றையெல்லாம் தூக்கி எறியப்போகிறார். தற்பெருமையுடையோர் இதயத்திலும் மனத்திலும் ஆணவம் கொண்டவர்கள். வலிமையுடையோர் உண்மையில் ஆட்சி செய்பவர்கள், சிம்மாசனங்களில் அமர்ந்திருப்பவர்கள். மிகவும் புரட்சிகர மாற்றமாக பசியுள்ளவர்களை நிரப்புவதும் பணக்காரர்களை வெறுங்கையராய் அனுப்பவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதரின் செயல்களுக்கு கட்டுப்படாத கடவுளைப் புகழ்ந்து பாடுகிறாள் மரியாள். வலிமைமிக்க, தூயவரான, இரக்கமுள்ள கடவுள் மனித மனப்பான்மையையும் சமூகத்தின் ஒழுங்கையும் தலைகீழாக மாற்றுகிறார். எனவே, மரியாள் தனது மக்களுக்கு கடவுள் உதவி செய்வார் என்று நம்பிக்கையுடன் பாடுகிறார் (54-56). மெசியாவின் வருகையில் கடவுளின் செயல்பாடு அனைத்தையும் புதியனவாக மாற்றாது; மாறாக, ஆபிரகாமுக்கு அவர் காட்டிய இரக்கமும், மூதாதையருக்கு அவர் அளித்த வாக்குறுதிகளும் என்றென்றும் தொடரும். இவ்வாறு மரியாள் கடவுளை தன்னுடைய மீட்பராக மட்டுமல்ல, இவ்வுலகின் மீட்பராகவும் கற்பனை செய்து புகழ்கிறாள்.