Arulvakku

18.08.2018 — Division precedes Reconciliation

20th Sunday in Ordinary Time – 18th August 2019 — Gospel: Lk 12,49-53

Division precedes Reconciliation

Jesus issues three pronouncements regarding his mission: “I have come to cast fire…”; “I have a baptism …”; and “I came to bring … division”. Some see in Jesus’ claim to cast fire on earth a foreshadowing of the gift of the Spirit at Pentecost. But the immediate context of conflict and judgment demand that the imagery of fire be associated with eschatological judgement (Lk 3,9.17; 17,29). This fire is only a sign of divine judgement (3,9.17) and not human revenge or retaliation (9,54).  The baptism spoken here is not water baptism, for Jesus had been baptized with that already; nor the baptism of the Spirit, which he had also received without measure. But it is the baptism of his sufferings (Mt 20,22-23; Mk 10,38) into which He is to be plunged. Sufferings are compared to a baptism, because of the largeness and abundance of them. As in baptism, performed by immersion, the person is plunged into and raised with the sufferings of Christ.

The most startling revelation is that Jesus claims to have come not “to bring about peace on earth” but “rather division”. The angelic chorus proclaiming “peace on earth” (2,14) seems far away now; much closer seems Simeon’s prophecy that the child Jesus was “to be a sign to be spoken against” (2,34). Rome’s peace was false and only preserved the existing order; Jesus’ peace would come at a cost, because the call for decision, either to follow or oppose Him, is a call for division. These divisions would begin with the basic social unit, the family (12,52-53). These divisions echo the divisions of Mic 7,6, and presume a family unit of “five in one house”: father, mother, daughter, son, and son’s wife. Jesus’ own family members were the first to suffer from this divisiveness: Simeon predicted that because of this child a sword would piece Mary’s soul (2,35; 2,48-50; 8,19-21).

Even though Jesus brings down fire or division, he is the harbinger of true and lasting peace. We must make a decision to follow him or not, to share his baptism or not.  For with Jesus, conflict precedes real peace; division marks the beginning of authentic reconciliation.

இயேசு தனது பணி குறித்து மூன்று அறிவிப்புகளை வெளியிடுகிறார்: “நான் தீமூட்ட வந்தேன்”, “நான் பெற வேண்டிய திருமுழுக்கு”, மற்றும் “பிளவு உண்டாக்கவே வந்தேன்”. தீ மூட்டவே வந்தேன் என்ற கூற்றில், தூய ஆவியின் கொடையை முன்னறிவிப்பதாக சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் உடனடி சூழலில் மோதல்களும் மற்றும் தீர்ப்பிடுதலும் வெளிப்படுவதால் இங்கு காணும் நெருப்பு உருவகம் நிலைவாழ்வின் இறுதித் தீர்ப்போடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். இந்த தீ மனிதர்களின் பழிக்கு பழிவாங்கல் அல்லது திருப்பி அடித்தல் போன்றது அல்ல, மாறாக, கடவுளின் இறுதித் தீர்ப்பின் அடையாளம்.

இங்கே பேசப்படும் திருமுழுக்கு தண்ணீரால் பெறுபவது அல்ல, ஏனென்றால் இயேசு ஏற்கனவே திருமுழுக்கு பெற்றவர்; ஆவியின் திருமுழுக்கும் அல்ல, காரணம் அதனையும் நிறைவாக பெற்றிருந்தார். ஆனால் இது துன்பங்களின் திருமுழுக்கு, அதில் அவர் மூழ்கி எழ வேண்டியுள்ளது. துன்பங்கள் திருமுழுக்கோடு ஒப்பிடப்படுகின்றன; ஏனெனில் அவை கணக்கில் அடங்காதது மற்றும் ஏராளமானது. திருமுழுக்கில் ஒருவர் நீரில் மூழ்குவது போல, கிறிஸ்துவின் துன்பங்களிலும் அவர் மூழ்கி உயிர்த்தெழ வேண்டும்.

மிகவும் திடுக்கிடும் வெளிப்பாடு என்னவென்றால், “மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு” அல்ல, மாறாக “பிளவினை உண்டாக்க” என்று இயேசு கூறுகிறார். “உலகில் அமைதி” என்று பறைசாற்றிய வானதூதர்களின் புகழ்ச்சிப் பாடல் இப்போது வெகு தொலைவில் உள்ளது. குழந்தை இயேசு பற்றி “பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாகவும், எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும்” என்ற சிமியோனின் இறைவாக்கு இங்கு மிகவும் நெருக்கமாக தெரிகிறது. உரோமை அரசின் அமைதி பொய்யானது மற்றும் தற்போதுள்ள ஒழுங்கை மட்டுமே அது பாதுகாக்கிறது. இயேசுவின் அமைதி விலைமதிப்பில்லாதது, ஏனென்றால் அது அவரைப் பின்பற்றுவது அல்லது எதிர்ப்பது குறித்து முடிவெடுப்பதற்கான ஓர் அழைப்பாகும். இது பிளவுக்கான அழைப்பாகவும் இருக்கிறது. இந்த பிளவுகள் அடிப்படை சமூக அமைப்பான குடும்பத்திலிருந்து தொடங்குகிறது. இப்பிளவுகள் மீக்கா 7,6இன் பிளவுகளை எதிரொலிக்கின்றன. மேலும் “ஒரே வீட்டில் ஐந்து பேர்” அதாவது தந்தை, தாய், மகன், மகள், மற்றும் மகனின் மனைவி, என்ற குடும்ப அமைப்பை அனுமானம் செய்கின்றன. இந்த பிரிவினையால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் இயேசுவின் சொந்த குடும்ப உறுப்பினர்கள், சிமியோன் இந்த குழந்தையின் காரணமாக, “மரியாளின் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும் என்று இறைவாக்குரைத்தார். இயேசு நெருப்பையோ அல்லது பிளவையோ கொண்டு வந்தாலும், அவர் உண்மையான நீடித்த அமைதியை கொணர்கின்றவர். அவரைப் பின்பற்றலாமா? வேண்டாமா? அவருடைய திருமுழுக்கில் பங்கு பெறலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில் இயேசுவோடு இணைந்திருந்தால், மோதல் அமைதிக்கு வழிவகுக்கும், உண்மையான ஒப்புரவுக்கு பிளவு ஒரு தொடக்கமாய் அமையும்.