Arulvakku

21.08.2019 — Reversal surprises

20th Week in Ord. Time, Wednesday – 21stAugust 2019 — Gospel: Mt 20,1-16

Reversal surprises

Mt 19,30 serves as a transition to today’s parable of the labourers in the vineyard (20,1-16), and its two halves becomes a reversal conclusion in the last verse (20,16). The emphasis on the parable is the equal treatment God freely bestows on all, an emphasis which does not fit Matthew’s concern about eschatological reversal and the reward of the poor in 19,30 and 20,16.  Actually, Matthew’s interest is focused on the first and last groups (19,30 and 20,16), which supply the contrast. The reversal-theme is sounded in the command to pay the last first, though the main reason for the reversal here is to allow the first group to learn about the payment given to the last group and thus to build up their hopes. The lord’s generosity, which is a pleasant surprise to the last group, becomes a cruel disappointment to the first group. The grumblers harbor envy because the lord is generous towards those who don’t merit. His generosity is an expression of a gracious freedom, not a malicious unpredictability, while their complaints are an expression of their lovelessness. God’s justice bestows mercy on the unfortunate and rejects the proud claims of merit (Mt 8,11-12). This reminds of Paul’s teaching on God’s saving justice and sovereign free choice (Rom 9,14-18).  Those who think they can calculate exactly how God must act are in for a surprise.  

மத்தேயு 19,30ன் தொடர்ச்சியாக திராட்சைத் தோட்டத் தொழிலாளர்களின் (20,1-16) இன்றைய உவமை அமைந்துள்ளது. மேலும் அதன் இரண்டு பகுதிகளும் தலைகீழ் முடிவுகளாக இறுதி வசனத்தில் அமைந்துள்ளன. இவ்வுவமை முக்கியமாக வலியுறுத்துவது, கடவுள் அனைவரையும் சுதந்திரமாகவும் சரிசமமாகவும் நடத்துகின்றார் என்பதே. இக்கருத்து மேற்கூறிய 19,30 மற்றும் 20,16 வசனங்களில்;, மத்தேயு வெளிப்படுத்த விரும்பும் நிறைவுகாலத்தின் தலைகீழ் மாற்றங்களோடும் மற்றும் ஏழைகளுக்கான வெகுமதியோடும் மிகவும் பொருந்தாத ஒன்றாகும். உண்மையில் மத்தேயுவின் ஆர்வம், முரண்பாட்டை முன்னிறுத்தும் முதல் மற்றும் கடைசி குழுக்களில் (19,30 மற்றும் 20,16) கவனம் செலுத்துகிறது. கடைசியானோருக்கு முதலில் கூலித்தொகையை செலுத்த வேண்டும் என்ற கட்டளையிலிருந்து இந்த தலைகீழ் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. இருப்பினும் இங்கே தலைகீழ் மாற்றங்களை அனுமதிப்பதற்கான முக்கிய காரணம், முதல் குழு கடைசி குழுவிற்கு வழங்கப்பட்ட கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதால்; இது அவர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றது. நிலக்கிழாரின் தாராள மனப்பான்மை கடைசி குழுவிற்கு ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியமாக இருக்கின்றது; முதல் குழுவிற்கோ ஒரு கொடூரமான ஏமாற்றமாக மாறுகின்றது. முணுமுணுப்பவர்கள் பொறாமைப்படுகிறார்கள்; ஏனென்றால் தகுதியற்றவர்களுக்கு இறைவன் தாராளமாக இருக்கின்றார். அவரது தாராள மனப்பான்மை, கணிக்க முடியாத தவறான சிந்தனை அல்ல, அவரின் கருணையுள்ள சுதந்திரத்தின் வெளிப்பாடாகும். அதே நேரத்தில் முணுமுணுப்பவர்களின் முறையீடுகள் அவர்களின் அன்பற்ற தன்மையின் வெளிப்பாடாகும். கடவுளின் நீதி துரதிஷ்ட வசமானவர்களுக்கு இரக்கம் அளிக்கிறது; பெருமையடித்துக் கொள்ளும் தகுதியுடைவர்களை நிராகரிக்கிறது (மத் 8,11-12). இச்செயல் மீட்பளிக்கும் கடவுளின் நீதி மற்றும் அதிகாரத்தோடு உள்ள அவரது சுதந்திரத்தை எடுத்துக் கூறும் பவுலின் போதனையை நினைவூட்டுகிறது (உரோ 9,14-18). கடவுளை தம் கைப்பாவை என்று சரியாக கணக்கிட நினைப்பவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.