Arulvakku

22.08.2019 — Wedding garment

20th Week in Ord. Time, Thursday – 22nd August 2019 — Gospel: Mt 22,1-14

Wedding garment

The marriage feast was a well-known Jewish image expressing joy in the last days. The NT often uses the table-fellowship or a marriage feast as a symbol of God’s fellowship with humanity in heaven (Mt 25,10; Rev 19,7-9). The motifs of father and son, the sending of two groups of servants, the murder of the servants, the punishment of the murderers, and the transfer of some privilege to a new group, these information’s link this parable to the preceding parable of the tenants (21,33-46). In this narration, the process of salvation history and the situation of the church come to the fore front. The two group of servants are probably not the former and later prophets (as in 21,34-36), but rather the prophets of OT and the apostles of the NT. At first invitation, God’s gracious call to the banquet and Israel’s violent rejection of the messengers convey the sad history of salvation. God’s patience with Israel is underscored by the second invitation. The second group of servants, i.e., the apostles, also undergo the violent fate of the prophets at the hands of Israel. The wedding garment symbolizes a life of justice, a life lived in keeping with God’s call and His will. One fool has come into banquet with dirty, rumpled clothing, symbolizing a life that has undergone no basic change, a life that has not produced fruits worthy of repentance. Though the salvation is offered freely, yet it demands a positive and active response that should fit-in well with the noble nature of the gift offered.

திருமண விருந்து என்பது இறுதி நாட்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மிகவும் பிரபலமான ஒரு யூத உருவகமாகும். புதிய ஏற்பாட்டில் விண்ணுலகில் மனுக்குலத்துடன் கடவுள் ஏற்படுத்தும் தோழமையின் அடையாளமாக திருமண விருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது (மத் 25,10; திவெ 19,7-9). இந்த உவமையில் காணும் தந்தை, மகன் இருவரின் நோக்கங்கள், பணியாளர்களை இருமுறை குழுக்களாக அனுப்புதல், பணியாளர்களைக் கொல்வது, கொலைக்காரர்களுக்கு தண்டனை வழங்குவது மற்றும் புதிய குழுவிற்கு சில சலுகைகளை மாற்றித் தருவது போன்ற தகவல்கள் முந்தைய உவமையான கொடிய குத்தகைக்காரர் உவமையுடன் (21,33-46) தொடர்புபடுத்துகிறது. இவ்வர்ணனையில் மீட்பின் வரலாறும் மற்றும் திருச்சபையின் நிலவரமும் மேலோட்டமாய் தெரிகிறது. இரண்டு குழு பணியாளர்களும் பழைய மற்றும் புதிய இறைவாக்கினர்களை குறிக்கவில்லை; மாறாக பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களையும் புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களையும் குறிக்கின்றார்கள். முதல் அழைப்பில், விருந்துக்கான கடவுளின் கருணை அழைப்பும் மற்றும் இஸ்ரரேயலரின் வன்முறையான நிராகரிப்பும் மீட்பின் சோகமான வரலாற்றை வெளிப்படுத்துகிறது. இஸ்ரேயலுடன் கடவுள் கொள்ளும் பொறுமை இரண்டாவது அழைப்பாக அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. இரண்டாவது குழு பணியாளர்களான, அப்போஸ்தலர்களும் இறைவாக்கினர்களைப் போல இஸ்ரயேலின் கைகளில் வன்முறையான முடிவை அனுபவிக்கிறார்கள். திருமண ஆடை என்பது கடவுளின் அழைப்பிற்கும் விருப்பத்திற்கும் எற்ப வாழ்ந்த ஒரு வாழ்க்கை, அதாவது, நீதிக்கான வாழ்க்கையை குறிக்கிறது. அந்த விருந்திற்கு ஒரு முட்டாள் அழுக்கான, கசங்கிய ஆடைகளுடன் வந்துள்ளான். இது அடிப்படை மாற்றங்களுக்கு உட்படாத வாழ்க்கை, அதாவது, மனந்திரும்புதலுக்கு வழிவகுக்காத வாழ்க்கையை குறிக்கிறது. மீட்பு இலவசமாக வழங்கப்பட்டாலும், வழங்கப்படும் உன்னதக் கொடைக்கு ஏற்ப ஒருவரின் நேர்மறையான மற்றும் சுறுசுறுப்பான பதில்மொழியை மீட்பின் அழைப்பு எதிர்நோக்குகிறது.