Arulvakku

23.08.2019 — Jesus’ God consciousness

20th Week in Ord. Time, Friday – 23rd August 2019 — Gospel: Mt 22,34-40

Jesus’ God consciousness

God is the main reality of Jesus’ life. For the third time we are struck by Jesus’ God centeredness in saying, “Love the Lord your God”. As in his three temptations in the desert (4,1-11), so now in the three questions that are posed before him in the temple, Jesus stands before us as God-centred man. God towers in sovereignty above the state (22,15-22), above death (22,23-33), and now above all other human responsibilities (22,34-40). Because God is so dim in modern consciousness, Jesus answer startles its hearers. God centeredness is clubbed in his double-love command. The purpose of living is the adoration of God and the cherishing of human beings. His double-love command gives humans a direction to face towards and a way to be. The God with whom Jesus faces his hearers is “the Lord your God”, that is, Yahweh, the God with an address, the God of Israel, the God with a recorded history and with clear claims. When Jesus commanded love of “the Lord your God,” he commanded love for a God who first loved us. He highlights that this already loving God is “your” God. In Jesus, we are directed to love the God who has already done great saving things for his people and for the world in Israel.

இயேசுவினுடைய வாழ்க்கையின் முக்கிய மையமாய் விளங்கியவர் கடவுள். மூன்றாவது முறையாக “உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து” என்று கூறுவதன் மூலம் இயேசு கடவுள் மையமாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. பாலைவனத்தில் அவர் மேற்கொண்ட மூன்று சோதனைகளைப் போலவே (4,1-11) இப்போது ஆலயத்தில் அவருக்கு முன் எழுப்பப்படும் மூன்று கேள்விகளில், இயேசு கடவுளை மையமாகக் கொண்ட மனிதராக நம் முன் நிற்கிறார். கடவுளின் ஆட்சியுரிமை, அரசுக்கு மேலாகவும் (22,15-22), இறப்பிற்கு மேலாகவும் (22,23-33), இப்போது எல்லா மனிதரின் கடமைகளுக்கு மேலாகவும் (22,34-40) உயர்ந்திருக்கின்றது. நவீன உணர்வு நிலையில் கடவுளை தெளிவற்றவராக உணர்வதால், இயேசுவின் பதிலைக் கேட்பவர்கள் திடுக்கிடுகிறார்கள். கடவுள் மையமாக இருப்பது அவரது இரட்டை-அன்புக் கட்டளையோடு பிணைக்கப்பட்டுள்ளது. நம் வாழ்வின் நோக்கம் கடவுளை வணங்குவதும் மனிதர்களை நேசிப்பதுமாகும். எனவே அவரது இரட்டை-அன்புக் கட்டளை மனிதர்களுக்கு, இறைவனை எதிர்நோக்கிட ஒரு திசையையும், மனிதராய் வாழ்வதற்கு ஒரு வழியையும் தருகிறது. இயேசுவை செவிமடுப்பவர்கள் எதிர்கொள்ளும் கடவுள் “உங்கள் ஆண்டவராகிய கடவுள்.” அதாவது இவரை யாவே-இறைவன், அடையாளங்களில் வெளிப்படுத்திய கடவுள், இஸ்ரயேலின் கடவள், வரலாற்று இறைவன் மற்றும் தெளிவான கொள்கைகளைக் கொண்ட கடவுள் என்று பல அனுபவப் பெயர்களில் வர்ணிக்கலாம். “உங்கள் ஆண்டவராகிய கடவுளை” நேசிக்கும்படி இயேசு கட்டளையிட்டபோது, முதலில் நம்மை அன்பு செய்த கடவுளை முழுமையாய் அன்பு செய்யும்படி கட்டளையிடுகிறார். ஏற்கனவே நம்மை அன்பு செய்யும் இக்கடவுள் தான் “உங்கள்” கடவுள் என்று வலியுறுத்துகிறார். இஸ்ரயேலில் மாபெரும் மீட்புச் செயல்களால் ஏற்கனவே தம்முடைய மக்களையும் உலகினரையும் வழிநடத்திய கடவுளை அன்பு செய்யும்படி, இயேசுவில் நாம் வழிநடத்தப்படுகிறோம்.