Arulvakku

01.09.2019 — Exhibit eschatological characters

22nd Ordinary Sunday – 01st September 2019 — Gospel: Lk 14,1.7-14

Exhibit eschatological characters

The meal with the Pharisees provides Jesus an opportunity to continue his teaching about God’s kingdom. He explains two things here: about with what spirit those invited must receive the invitation (14,7-11) and with what spirit they must invite the others (14,12-14). When Jesus notices the guests seeking the places of honour in the dining room, he teaches about the genuine humility required for participating in the kingdom banquet. In the form of a parable, he shows that those who take the lowest place are those who know their unworthiness and look to God’s grace to move up higher, while those who exalt themselves and assume the highest places for themselves will be humiliated. Honour or shame comes from God himself at the celestial banquet, not rendered by human beings. The theme of divine reversal anticipates traditional wisdom of Judaism (Prov 3,34; 29,23; Sir 3,17-20; Ezek 21,26; Job 22,29). It is a wisdom from life experience, in which the proud are humiliated and the humble are exalted (Lk 18,14; Mt 18,4; 23,12; 1 Pet 5,6). Jesus also takes the occasion to teach about the hospitality and generosity in God’s kingdom. Hospitality and generosity are genuine when no motive exists besides giving. It is giving to those people who cannot repay their hosts. The newness brought by Jesus requires a new relationship: Love that does not calculate, but which takes away the inequalities and discrimination among men. Again we see that humility and openness to all people are the eschatological character taught by Jesus to those seeking to follow him. 

பரிசேயர்களின் பந்தியமர்வு இறையாட்சி பற்றிய போதனைகளைத் தொடர இயேசுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அவர் இங்கு இரண்டு விடயங்களை விளக்குகிறார்: விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் எந்த மனநிலையுடன் அழைப்பைப் பெற வேண்டும் (14,7-11) மற்றும் அவர்கள் எந்த மனநிலையுடன் மற்றவர்களை அழைக்க வேண்டும் (14,12-14). பந்தியில் மரியாதைக்குரிய இடங்களை விருந்தினர்கள் தேடுவதை இயேசு கவனித்த போது, அவர் இறையாட்சியின் பந்தியில் பங்கேற்க தேவையான உண்மையான மனத்தாழ்ச்சியைப் பற்றி கற்பிக்கிறார். ஒரு உவமையின் வடிவத்தில், மிகக் தாழ்ந்த இடத்தைப் பெறுபவர்கள் தங்களது தகுதியற்ற தன்மையை அறிந்தவர்கள் என்றும், உயர்ந்த நிலைக்குச் செல்ல கடவுளின் அருளை எதிர்நோக்கியிருப்பார்கள் என்றும் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் தங்களை உயர்த்திக் கொண்டு உயர்ந்த இடங்களில் தங்களை அமர்த்திக் கொள்பவர்கள் அவமானப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார். மரியாதை அல்லது அவமானம் மனிதர்களால் வழங்கப்படுவதல்ல, மாறாக விண்ணக விருந்திற்கு கடவுளிடமிருந்து வருவதாகும். கடவுள் புரட்டிப் போடுவார் என்ற கருப்பொருள் யூதமதத்தின் பாரம்பரிய ஞானத்தை எதிர்நோக்கியுள்ளது (நீதி 3,34; 29,23; சீராக் 3,17-20; எசேக் 21,26; யோபு 22,29). இது வாழ்க்கை அனுபவத்திலிருந்து வெளிப்படும் ஞானமாகும். இதில் பெருமைமிக்கவர்கள் அவமானப்படுகிறார்கள், தாழ்ச்சியுடையவர்கள்  உயர்ந்த நிலையை அடைகிறார்கள் (லூக் 18,14; மத் 18,4; 23,12; 1பேது 5,6). கடவுளுடைய இறையாட்சியில் நிலைத்திருக்கும் விருந்தோம்பல் மற்றும் தாராள மனப்பான்மை பற்றி கற்பிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் இயேசு எடுத்துக்கொள்கிறார். கொடுப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாதபோது விருந்தோம்பல் மற்றும் தாராள மனப்பான்மை உண்மையானவை. தங்களால் திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கே இது கொடுக்கப்படுகிறது. இயேசு கொணர்ந்த இந்த புதிய சிந்தனைக்கு ஒரு புதிய உறவுநிலை தேவைப்படுகிறது. அதாவது, கணக்குப் பார்க்காத அன்பு. இது மனிதர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் உடைத்தெறிகிறது. மனத்தாழ்ச்சியும் திறந்த மனதுடன் எல்லோரையும் ஏற்றுக் கொள்வதுமே நிறைவாழ்வின் குணங்கள் என்று இயேசு தம்மை பின்பற்ற விரும்புவோருக்கு மீண்டும் கற்பிப்பதை நாம் காண்கிறோம்.