Arulvakku

02.09.2019 — Jesus’ Prophetical Assertion

22nd Week in Ord. Time, Monday – 02nd September 2019 — Gospel: Lk 4,16-30

Jesus’ Prophetical Assertion

In choosing the text from the Prophet Isaiah 61,1-2, into which Luke has inserted the verse of Is 58,6, presents the ‘mission’ statement of Jesus’ ministry. By referring to this manifesto and its fulfillment in him, Jesus presents himself as a prophet. In further references, Luke sarcastically mentions Elijah and Elisha to stress the prophetic aspect of Jesus. As the prophets were not always accepted by his people, Jesus too, finds himself rejected by his own folk in his hometown. Thus, this whole narrative foreshadows the rest of Jesus’ ministry and his ultimate rejection by the Jewish nation. In the midst of his struggle, it was the Spirit of the Father that led Jesus to preach, teach, proclaim and heal. The power of the Spirit attracts, creates awe and wonder, invites and initiates the process of excitement in people and ends up in conversion. Luke mentions two reactions to Jesus’ mission statement: the first reaction was one of admiration, but apparently it was a passing one. The second reaction was one of rejection and hostility leading to Jesus’ fatal end. 

இறைவாக்கினர் எசாயாவின் 61,1-2 பகுதியை இயேசு தம் மறைப்பணியின் அறிக்கையாக முன்வைக்கிறார். இந்த இறைவாக்குப் பகுதியில் எசாயாவின் 58,6 என்ற வசனத்தையும் லூக்கா நற்செய்தியாளர் இணைத்துள்ளார். இந்த அறிக்கையை வெளியிட்டதோடு, அது தம்மில் நிறைவேறுவதை குறிப்பிடுவதன் மூலம், இயேசு தன்னை ஒரு இறைவாக்கினராக முன்வைக்கிறார். மேலும் உள்ள வர்ணனையில், இயேசுவின் இறைவாக்குத் தன்மையை வலியுறுத்துவதற்காக எலியாவையும் எலிசாவையும் லூக்கா நற்செய்தியாளர் கிண்டலாகக் குறிப்பிடுகிறார். இறைவாக்கினர்கள் எப்பொழுதும் அவருடைய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாததால் இயேசுவும் தனது சொந்த ஊரில் தன்னை நிராகரித்ததைக் காண்கிறார். ஆகவே, இந்த முழுவர்ணனையும் இறுதியில் இயேசுவும் அவருடைய பணியும் யூதர்களால் நிராகரிக்கப்பட உள்ளதை முன்னறிவிக்கிறது. இந்த போராட்டத்தின் இடையே, தந்தையின் ஆவிதான் இயேசுவை போதிக்கவும், கற்பிக்கவும், அறிவிக்கவும், குணப்படுத்தவும் வழிநடத்துகின்றது. ஆவியின் வல்லமைதான் மக்களை இயேசுவின்பால் ஈர்த்து, பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் உருவாக்குகின்றது. மேலும், உற்சாகத்தை உருவாக்கி செயல்முறைக்கு அழைக்கின்றது மற்றும் அவர்களை மனமாற்றத்தில் முழுமையாக்குகின்றது. இயேசுவின் பணி அறிக்கையின் வழியாக லூக்கா இரண்டு எதிர்வினைகளைக் குறிப்பிடுகிறார்: முதல் எதிர்வினை வியந்து போற்றுதலாகும். ஆனால் வெளிப்படையாக இது நிலைத்து நிற்பதல்ல. இரண்டாவது எதிர்வினை நிராகாரிப்பு மற்றும் விரோத மனநிலையாகும். இது இயேசுவின் துன்பகரமான முடிவுக்கு வழிவகுத்தன.